புதுவை மாநிலம் பாகூர் அருகே உள்ள ஆதிங்கப்பட்டு கிராமத்தில் அமைக்கப்பட்டு உள்ள அண்ணஅம்பேத்கார் முழு உருவ வெண்கல சிலையை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் நேற்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். மேலும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார். கட்சி நிர்வாகிகள் இளவரசன், கபிலன், சுடர்வாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் புதுவை மாநில அமைச்சர் ராஜவேலு, முன்னாள் அமைச்சர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் ரவிக்குமார், கட்சி நிர்வாகிகள் வணங்காமுடி, பொதினி வளவன், அமுதவன், செந்தமிழ்ச்செல்வன் மற்றும் பலர் கலந்துகொண்டு வாழ்த்தி பேசினார்கள். நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில மற்றும் தமிழக பகுதியைச் சேர்ந்த நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.