சாதி ஒழிப்பு போராளி மதுரை கரிகாலனுக்கு முதலாம் ஆண்டு வீரவணக்கம்.




மதுரை வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு பட்டா வழங்க மறுத்து வந்தது. இந்த மக்களின் நிலையை கண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அப்பகுதி மக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டங்கள் , சாலை மறியல்கள் மற்றும் உண்ணாவிரதங்கள் என எத்தனையோ போராட்டங்கள் நடத்தி தீர்த்தக்காடு மக்களுக்கு குடியிருப்புக்கான பட்டாக்களை அரசிடம் போராடிப் பெற்றுத் தந்தது. ஆனால் காலப்போக்கில் தாழ்த்தப்பட்ட குடியிருப்புக்குள் ஊடுருவிய பணம்படைத்த ஆதிக்க சாதியினர் தீர்த்தக்காடு பகுதி முழுவதும்  ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர். இது சம்பந்தமாக அரசு அதிகாரிகளிடம் எத்தனையோ முறை முறையிட்டும், அரசு அதிகாரிகள் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகவே இருந்து வந்தனர்.

இந்நிலையில்... குரங்கு கையில் சிக்கிய பூ மாலையைப்போல் ஆகிவிட்ட இந்த ஒடுக்கப்பட்ட மக்களின்  குடியிருப்புகளை ஆதிக்க சாதிவெறியர்களிடமிருந்து மீண்டும் மக்களிடம் பெற்றுத்தருவதில் மிகப் பக்குவமான முறையில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினரும் தொடர்ச்சியான போராட்டங்களை முன்னெடுத்துச் சென்றனர். இது அவர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. இவர்களை அடுத்த கட்டப் போராட்டஙகளில் ஈடுபடவிடக்கூடாது என்று எண்ணிக் கொண்டு, விடுதலைச் சிறுத்தைகளை அச்சுறுத்தும் வகையிலே, தீர்த்தகாடு பகுதியை சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகனும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தை எழுச்சி பாசறையின் முகாம் செயலாளருமான 18 வயதே நிரம்பிய கரிகாலன்  25.09.2012 மாலை 6.00 மணியளவில் தீர்த்தக்காட்டில் 9பேர் கொண்ட கொலைவெறி கும்பலால் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

படுகொலை செய்யப்பட்ட சாதி ஒழிப்பு போராளி கரிகாலனுக்கு மதுரை வண்டியூர் தீர்த்தக்காட்டில் உள்ள அவரது இல்லத்தில் முதலாம் ஆண்டு வீரவணக்க நிகழ்சி 25.09.2013 அன்று காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இதில் மாநகர் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர்.ச.அன்பழகன் மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர். அ.செல்லப்பாண்டியன், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர். அய்யங்காளை, மாவட்ட துணைச் செயலாளர் மணியரசு, பாலம்மாள், இராக்கப்பன், அ.போஸ், தென்னிலவன், முகிலன், இனியரசன், பூபாலன், ரமேசு, ரேவதிகுமார்வளவன், குமார்வளவன், திருமாறன், தமிழழகன், தாமரைவளவன், முருகன், வரிச்சியூர் பூமிநாதன், ப.வீரமணி, ரவிக்குமார், ஜோசப், வெற்றி, ராம்குமார், பாண்டியன், ராணி, ராசு, ஐ.டி.ஐ. முத்தையா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் கலந்து கொண்டு வீரவணக்கம் செலுத்தினர்.இந்நிகழ்சியினை மா.அன்பின்பிரபாகர் ஒருங்கிணைப்பு செய்திருந்தார்.


தொகுப்பு.. ஓவியர்.நா.அழகர்சாமி
(மா.து.அமைப்பாளர், க.பொ.வி.இயக்கம்)