மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகள் அனுசுயாவிற்கு தொல்.திருமாவளவன் நிதியுதவி



மரக்காணம் வன்முறையில் தீக்கிரையான வீடுகளில் ஒன்று அனுசுயாவின் வீடு ஆகும்.  அவருக்கு எதிர்வரும் மே 27 அன்று திருமணம் நடைபெறவுள்ளது.  அதற்காக வைத்திருந்த பணமும் நகையும் வன்முறையாளர்களால் கொள்ளையடிக்கப்பட்டன. அரசு அறிவித்த உதவித் தொகை தவிர வேறு எந்த உதவியும் இல்லாமல் தவித்துக் கொண்டிருந்த அனுசுயாவின் பரிதாப நிலை குறித்து கடந்த மே 22 அன்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளேட்டில் செய்தி வெளியாகியிருந்தது. அதைப் படித்தவுடன் அனுசுயாவின் குடும்பத்தினரைத் தொடர்புகொண்டு நிலைமையைக் கேட்டறிந்தோம். அவரது திருமணச் செலவுகளுக்காக ரூபாய் 50,000 விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று வழங்கப்பட்டது.  இன்று (24-5-2013)  மாலை 5 மணியளவில் வேளச்சேரியில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள், அனுசுயாவின் தாயார் திருமதி அங்காளம்மாளிடம் இதனை வழங்கினார்.  மேலும், அனுசுயாவின் திருமணத்திற்கு சுமார் ரூ. 30,000 மதிப்புள்ள சீர் வரிசைப் பொருட்களும் புதுச்சேரி விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வழங்கப்படுகிறது.

0 comments:

கருத்துரையிடுக