பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான கிரீமிலேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக!


பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான  கிரீமிலேயருக்கான வருமான வரம்பை 12 இலட்சம் ரூபாயாக உயர்த்துக! – 
மத்திய அரசுக்கு தொல்.திருமாவளவன் கோரிக்கை

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டில் கிரீமி லேயர் வரம்பு விதிக்கப்பட்டுள்ளது.  ஆண்டுக்கு நான்கரை இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீட்டு உரிமை கிடையாது என மத்திய அரசு வரையறுத்திருந்தது.  உச்சநீதிமன்ற ஆணையின் அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த வருமான வரம்பு உயர்த்தப்பட வேண்டும்.  2011ஆம் ஆண்டோடு நாலரை லட்சம் ரூபாய் என்ற வருமான வரம்பு காலாவதியாகிவிட்டது.  அப்போதே அது உயர்த்தப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால், மத்திய அரசு இதில் அக்கறை காட்டவில்லை.

தற்போதுள்ள விலைவாசியைக் கணக்கில்கொண்டு இந்த வருமான வரம்பை ஆண்டுக்கு 12 இலட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று கடந்த 2012ஆம் ஆண்டு திசம்பர் மாதத்தில் இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை மனு ஒன்று அளிக்கப்பட்டது.  இப்போது அந்த வருமான உச்ச வரம்பு 6 இலட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது எவ்விதத்திலும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு உதவியாக அமையாது.  இந்த வருமான உச்ச வரம்பின் காரணமாக உயர்கல்வி நிலையங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருந்தும் ஏராளமான இடங்கள் நிரப்பப்பட முடியாமல் காலியாக உள்ளன.  எனவே, பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு வருமான உச்ச வரம்பை ஆண்டுக்கு12 இலட்சம் என உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் வலியுறுத்துகிறோம். பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும்கூட இதைத்தான் பரிந்துரைத்திருந்தது என்பதையும் சுட்டிக்காட்டுகிறோம்.

சமூகநீதிப் போராட்டத்தில் எப்போதும் முன்னணி வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகள், இந்தப் பிரச்சனையிலும் மத்திய அரசுக்கு உரிய அழுத்தங்களைத் தந்து வருமான உச்ச வரம்பை உயர்த்துவதற்கு முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

இவண்
தொல்.திருமாவளவன்

1 comments:

தமிழகத்தில் தலித் மக்களுகாக ,ஒடுக்கப்பட்ட .மக்களுகாக . போரடி கொண்டிருக்கும் ஒரே தலைவன் எங்கள் அம்பேத்கர் அண்ணன் திருமாவளவன் மட்டும் தான் .... என்பதை தம்பி நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் .எதற்காக அவர் (எம் .பி ) பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் .எவர் ராஜினாமா செய்தால் உடனே ஆளும் தன்மை இல்லாத இந்த மத்திய. அரசும் .அப்போதைய மாநில ,அரசும் இலஙகையில் நடத்தப்பட்ட போரை நிறுத்தி இருப்பார்களா ? ஏன் என்றல் ஒரு எம் .பி பதவி மட்டும் தான் உள்ளது ...ஏன் அது கூட உங்களுக்கு பிடிக்கவில்லையா ? அவர்கள் எல்லாம் இலங்கை பிரச்னை தேர்தல் நேரத்தில் மட்டும் தான் பேசி கொண்டீர்பர்கள் .அது எங்களுக்கு எங்களுடய உயிரின் ,உறவின் பிரச்சனை ..அது அவங்களுக்கு புரியாது .தமிழ்நாட்டில் தமிழ் தேசிய தலைவருக்கு பிறகு மேதகு என்ற மிகவும் பெரிய சொல் மேதகு பிரபாகரனுக்கு பிறகு அண்ணன் திருமவவனுக்கு பொருந்தும் ..அந்த அளவுக்கு தலித்மக்களுகாக .ஆயுதம் ஏந்திய விடுதலை புலிகளை போல ,ஆயுதம் ஏந்த விடுதலை சிறுத்தைகளாக நாங்கள் தமிழ் தேசியத்துக்காக போரடி வருகிறோம் ...அதன் அடிப்படை இல் தான் "" சாதி ஒலிப்பே மக்களின் விடுதலை"" என்ற உயர்ந்த சிந்தனை கொண்ட எங்களின் தலைவரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு நாங்கள் செயல் பட்டு வருகிறோம் ...........நெல்லை திருமாரவி.....

28 மே, 2013 அன்று PM 6:50 comment-delete

கருத்துரையிடுக