கடலூரில் விடுதலை சிறுத்தைகள் உண்ணாவிரதம்
ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரி
கடலூரில் விடுதலை சிறுத்தைகள் & கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம்
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்கக்கோரி கடலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.
உண்ணாவிரத போராட்டம்
இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வலியுறுத்தியும் கடலூர் உழவர் சந்தை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம் நடத்தினர். போராட்டத்துக்கு நகர செயலாளர் பாவாணன் தலைமை தாங்கினார்.மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். துணை செயலாளர்கள் குணத்தொகையன், ஸ்ரீதர் ஆகியோர் வரவேற்றனர். உண்ணாவிரதத்தை பொதுச்செயலாளர் ரவிக்குமார் தொடங்கி வைத்து பேசினார். மாநில துணை பொதுச்செயலாளர் திருமார்பன், மாநில துணை செயலாளர் நல்லரசன், மாவட்ட செய்தி தொடர்பாளர் ஆதவன் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதில் கிட்டு, அருண், புகழேந்தி, சரண் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். உண்ணாவிரதத்தை தி.மு.க. மாநில மாணவரணி செயலாளர் இள.புகழேந்தி முடித்து வைத்து பேசினார். முடிவில் நகரசபை உறுப்பினர் சரோஜினி நன்றி கூறினார்.
போராட்டம்
இதேபோல் கடலூர் அரசு மருத்துவமனை முன்பு உள்ள தமிழ்குடிலில் வில்வகுளம் முகாம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடந்த உண்ணாவிரதத்துக்கு முகாம் அமைப்பாளர் சூர்யா தலைமை தாங்கினார். மாநில துணை செயலாளர் ஆதித்ய கரிகாலன் தொடங்கி வைத்தார். இதில் சிலம்பு, பிரதீப், செந்தில், அறிவுடைநம்பி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 comments:
கருத்துரையிடுக