இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக மேட்டூரில் இன்று கடையடைப்பு: மாணவர்கள்-வி.சி.மகளிர் அணியினர் உண்ணாவிரதம்


சேலம் மாவட்டம் மேட்டூரில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்தும், இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்குற்றவாளியாக அறிவிக்கக்கோரியும் இன்று கடையடைப்பு போராட்டம் நடந்தது.

பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு கொடுத்ததால் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. பஸ் நிலையம் சதுரங்காடி, தினசரி மார்க்கெட் ஆகிய இடங்களில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

கடைகள் அடைக்கப்பட்டதால் சுற்று வட்டார கிராம பகுதியில் இருந்து மேட்டூர் நகருக்கு வரும் மக்கள் கூட்டம் குறைந்த பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. நகரின் அனைத்து முக்கிய பகுதிகளிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேட்டூர் சின்னபார்க் பகுதியில் கல்லூரி மாணவர்கள் நேற்று உண்ணாவிரதத்தை தொடங்கினர். அவர்களின் போராட்டம் இன்று 2-வது நாளாகவும் நீடித்தது. இதே போல் சதுரங்காடி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் மகளிர் அணி சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று 2-வது நாளாகவும் நீடித்து வருகிறது.

0 comments:

கருத்துரையிடுக