காஞ்சி மாவட்ட தலைநகர் காஞ்சியில் சாலை மறியல்,கொடும்பாவி எரிப்பு


காஞ்சிபுரம் மாவட்டம், தலைநகர் காஞ்சியில் விடுதலைச்சிறுத்தைகள் மாபெரும் சாலை மறியல் மற்றும் கொடும்பாவி எரிப்பு போராட்டம். 

காஞ்சிபுரம் மாவட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று காலை 10 மணியளவில் தலைநகர் காஞ்சியில் பேருந்து நிலையம் அருகில் காஞ்சி மாவட்ட துணை செயலாளர் இந்திரா அம்பேத்கர்வளவன் அவர்கள் தலைமையில் இன வெறியன் கொடுங்கோலன் ராஜபக்சே உருவ பொம்மையை எரித்து இலங்கை, இந்திய அரசுகளை கண்டித்து முழக்கம் எழுப்பி 100 க்கும் மேற்பட்ட விடுதலைச்சிறுத்தைகள் சுமார் 30 நிமிடங்கள் சாலை மறியல் செய்தனர். கைது செய்ய சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் மறியலில் ஈடுபட்ட சிறுத்தைகள் கலைந்து சென்றனர். 







மறியல் போராட்டத்தை காஞ்சி ஒன்றிய, நகர மேலிடப் பொறுப்பாளர் பாசறை செல்வராசு அவர்கள் ஒருங்கிணைத்திருந்தார்.

நகர செயலாளர் திருமாதாசன், ஒன்றிய அமைப்பாளர் ஸ்டாலின், செயலாளர் டேவிட், வழக்கறிஞர் அணி கவியரசு,மாவட்ட நிர்வாகிகள் ஊடக மையம் மதி.ஆதவன், ஏ.வி.ராவணன், செஞ்சுடர்,அகரம் முரளி, பிரபாவளவன், உள்ளிட்ட ஒன்றிய நகர நிர்வாகிகள் பாலாஜி, புல்லட் சதீஷ், திராவிடன், இளமாறன், ரஞ்சித்வளவன், கண்ணன், வாலாசாபாத் ஒன்றிய செயலாளர் உதயசூரியன், நகர செயலாளர் அசோக்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


0 comments:

கருத்துரையிடுக