மதுரை போராட்டங்கள்


.நா மன்றத்தில் அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானத்தில், இராஜபக்சே இனப்படுகொலைக்கான போர்க் குற்றவாளி என்றும், அங்கு நடந்த இனப்படுகொலைக்கு பாரபட்சமற்ற பன்னாட்டு விசாராணை  நடத்தப்பட வேண்டும் என்றும், இந்திய அரசு ஐ.நா.மன்றத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானத்தை   தன்னிச்சையாக கொண்டு    வரவேண்டும்,   அதில் தனித் தமீழ் ஈழம் அமைவதற்க்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்,    இந்திய அரசு இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கவேண்டும்    போன்ற   கோரிக்கைகளை   வலியுறுத்தி 21-03-013 அன்று காலை 11.00  மணியளவில் மதுரை ஒத்தக்கடையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியை மதுரை கிழக்கு ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள்   இழுத்துப் பூட்டி முற்றுகைப்போராட்டம் நடத்தினர்.








இதில் இனவெறியன் இராஜபக்சேவின் உருவ பொம்மையும்,  சோனியா,  மன்மோகன்சிங்  ஆகியோரின் உருவப் படங்களையும் விடுதலைச்  சிறுத்தைகள்  தீயிட்டு கொளுத்தினர். முன்னதாக இப்போராட்டம்  மதுரை-மேலூர்  பிரதான சாலையிருந்து சிறுத்தைகளின் விண்ணை முட்டும்  முழக்கங்களோடு பேரணியாக ஆரம்பிக்கப்பட்டது.   பிறகு திடீரென பாரத ஸ்டேட் வங்கியை விடுதலைச் சிறுத்தைகள்   இழுத்துப் பூட்டி முற்றுகையிட்டதனால் காவல்துறையினர் செய்வதறியாது திகைத்து போயினர்.

இப்போராட்டதிற்கு  முற்போக்கு மாணவர் கழக மாநிலத் துணைச் செயலாளர் அ.செல்லபாண்டியன் தலைமை தாங்கினார்.  கொ. ஆறுமுகம்,   க.நல்லதம்பி,  பூபாலன்,  சிறுத்க்தைகனி ,  ம.முதல்வன் ,   ஏ.என்.சாமி,   குமார்வளவன்,   வரிச்சியூர் பூமிநாதன்,   வீரமணி,   பூமி,    திருமோகூர் முருகன்,    ஓவியர்.நா.அழகர்சாமி, மணிமாறன், இராஜகம்பீரம் பு.முருகன்,   ப.மார்க்கண்டன்,   கல்லானை,    இராஜகம்பீரம் முருகன்,    புதூர் மாரிமுத்து,    பாரதி,    பிச்சை,    செல்வி   உள்ளிட்ட ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள்  கலந்து கொண்டனர். 

மேலும் இதே கோரிக்கைகளை  வலியுறுத்தி திருப்பாலை முற்போக்கு மாணவர் கழக மாவட்டச்  செயலாளர்மு.மாதவன் தலைமையில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை விடுதலைச் சிறுத்தைகள் பூட்டுப் போட்டு உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். இதில் அரசமுத்துப்பாண்டியன்,  தீபா,   கார்வண்ணன், கதிர் பாண்டியன்,  சிறுத்க்தைகனி , செல்வி,  முரளி(எ)தமிழாளன்,  அன்பழகன், மகளிர் விடுதலை இயக்கம்   விடுதலை புலியம்மாள் , திருமா பிரபாகரன், உள்ளிட்ட மேற்கு ஒன்றிய நிவாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

 
தமுக்கம் எதிரேயுள்ள தபால் தந்தி அலுவலகத்தையும், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள    தபால்  நிலையத்தையும்,  விடுதலைச் சிறுத்தைகள்  முற்றுகையிட்டனர்.    , மேலூர் தபால் நிலையத்தையும் சிறுத்தைகள்  விட்டுவைக்கவில்லை.அதுவும் மேலூர் விடுதலைச் சிறுத்தைகளால் முற்றுகையிடப்பட்டது.மதுரை  மாப்பாளையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ஐந்து நாட்கள் தொடர் உண்ணாநிலை அறப்போராட்டம் நடத்தினர்.

இதேபோல் எஸ்.என்.பி காலனியில் தமிழ் மாரி  தலைமையில்   உண்ணாநிலை அறப்போராட்டம்  நடைபெற்றது. இதில் வெ.கனியமுதன்,காமராசு, தென்னிலவன்  உள்ளிட்ட  ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள்  கலந்து கொண்டனர்.  மதுரை  வானொலி  நிலையத்தை   முரளி(எ)தமிழாளன் தலைமையில் , அழகேசன், திருமா பிரபாகரன் ,  முகாம் செயலாளர் முருகேசன், மாயகிருஷ்ணன், தாமஸ், ஆதிவளவன் உள்ளிட்ட சிறுத்தைகள்  பலர் முற்றுகையிட்டனர்.

24-03-13 அன்று அலங்காநல்லூர் கேட்டுக்கடையில் தொல்காப்பியர் ஆட்டோ தொழிலாளர்கள் உண்ணாநிலை அறப்போராட்டத்தை ஆட்டோ சங்கத்தலைவர் கடல்கேசவன்   தலைமையில்    மேற்கொண்டனர்.     இப்போராட்டத்தில் தி.மு.க. மதுரை   மாவட்ட செயலாளர் பி.மூர்த்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.   இதே போல் மாவட்டம்  முழுவதும்  விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியினர்  போராட்டங்களை வ்லுப்படுத்தியிருப்பதால் , தென்மாவட்டங்களில் மாணவர்கள்  உள்ளிட்ட  தமிழீழ ஆதரவு  அமைப்புகளுக்கு  இப்போராட்டம்  ஊக்குவிப்பாகவும், அதே நேரத்தில் மக்களிடையே  ஒரு மாபெரும்  எழுச்சியை நேரடியாகவே  ஏற்படுத்தியிருக்கிறது என்பதை நம்மால் அறியமுடிகிறது 





திருமா.இன் செய்திக்காக
மதுரையிலிருந்து....

- ஓவியர்.நா.அழகர்சாமி 

0 comments:

கருத்துரையிடுக