வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீரை திறக்கக்கோரி சிதம்பரத்தில் ஆர்ப்பாட்டம்



கடலூர் மாவட்டம் வீராணம் ஏரி நீரை பிப்ரவரி மாதம் வரை விவசாயத்திற்கு திறந்து விட வேண்டும். டெல்டா பாசன பகுதியிலிருந்து நீக்கப்பட்ட 32 கிராமங்களை மீண்டும் அதே பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சிதம்பரம் காந்தி சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் தலைமை தாங்கினார். ரவிக்கமார், மாவட்ட செயலாளர்கள் தாமரைச்செல்வன், தயா.தமிழன்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தெற்கு மாவட்ட செயலாளர் செல்லப்பன் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கம் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில நிர்வாகி மூசா, நாரைக்கால் ஏரிபாசன விவசாயிகள் சங்கம் இளங்கீரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில், முன்னாள் மாவட்ட செயலாளர் காவியச்செல்ன், மாவட்ட துணை செயலாளர் குறிஞ்சிவளவன், நீதிவளவன், கலியபெருமாள், தமிழ்வளவன், செல்வமணி,அறவாழி, கரிகாலன், செய்தி தொடர்பாளர் நெடுமாறன், ஊராட்சி மன்ற தலைவர் அரசு, ராஜாரவிவர்மன், கவுன்சிலர் திருவரசு, ஒன்றிய செயலாளர்கள் முத்தையன், மணவாளன், வீரஜெகன், விருதை நகர அமைப்பாளர் மருதையன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக ஆர்ப்பாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் எழுச்சித் தமிழர் பேசியதாவது:–

”இந்த ஏரியை நம்பி தான் விவசாயிகள் உள்ளனர். ஏற்கனவே குறுவை பயிரை பறிகொடுத்த வேளையில், சம்பா பயிரும் கருகி வருகிறது. இப்பிரச்சினைக்காக தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம் நடத்தி வருகிறது. எப்போதும் இயற்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பக்கம்தான். ஏன் என்றால்? நாம் இயற்கையோடு இணைந்து வாழ்கிறோம். மற்றவர்களை போல சாதி வெறியை நாம் தூண்டவில்லை. 

இப்போராட்டம் திடீர் போராட்டமாக இருந்தாலும், அரசை அச்சுறுத்தும் போராட்டமாகும். கட்சி வரம்பு, சாதி வரம்புகளை கடந்து விவசாயிகள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்.சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் வட்டாரத்தை சார்ந்த விவசாயிகளுக்காக சோழர் காலத்தில் வீராணம் ஏரி உருவாக்கப்பட்டது. கடந்த காலத்தில் இந்த ஏரியை நம்முடைய முன்னோர்கள் வயிற்று கஞ்சிக்காக பாடுபட்டு உருவாக்கினார்கள். ஆனால் தற்போது, வீராணம் ஏரியை பராமரிக்கப்படாமல் தூர்ந்து போய் கிடக்கிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு குளம், குட்டை, ஏரிகளை தூர்வார வரும், கரைகளை பலப்படுத்தவும் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்குகிறது. இந்த நிதிகள் முறையாக பயன்படுத்தப்படுகிறா? என்றால் 25 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. பல காரணங்களால் 3போக விவசாயத்தில் ஒரு போக விவசாயமாவது முறை யாக நடக்குமா? என்பது கேள்விக்குரியாகி விட்டது. 

முல்லைபெரியாறு அணையின் கரையினை பலப்படுத்தாமல் அங்கு 6 மாவட்டங்கள் பாலைவனமாக உள்ளது.இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் ஏரி, குளங்களை அங்குள்ள அரசு முறையாக பராமரித்து, நீர்பாசன பரப்பை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் அங்கு விவசாயத்திற்கு எவ்வித பாதிப்பும் இல்லை. அதே சமயத்தில், தமிழகத்தை ஆண்டவர்கள் குளம், ஏரிகளை பாதுகாக்கவும், புதிய அணை கட்டவும் சிறு முயற்சி எடுத்து உள்ளார்களா?. இதைவிடுத்து, திருமாவளவன் தலைமயில் இருப்பவர்கள் வன்முறைக்காரர்கள் என்கிறார்கள். 

நான் பதவி வேனும் என்பதற்காக அப்பாவி மக்களிடையே மோதலை ஏற்படுத்த வில்லை.விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நாகரீகமானவர்கள். நான் இதுவரை யாரையாவது காயமப்படுத்தும் படி பேசி இருக்கிறேனா? இருக்காது. ஏன் என்றால் கட்சியின் கட்டுப்பாடு, பெற்றோர்களின் வளர்ப்பு என்னுடன் இருக்கிறது. சாதி மாறிய காதலுக்கு திருமாவளவன் காரணம் என்கிறார்கள். காதலுக்கு நான் காரணமில்லை. நவீன தொழில்நுட்ப வசதிகளுசெல்போன், இமெயில், பேஸ்புக் தான் முக்கிய காரணமாகும். தமிழ் சமூகத்தின் ஒற்றுமை தான் திருமாவளவனின் வெற்றி. இதுவரை நடந்ததை நாங்கள் மன்னித்து விட்டோம். மறந்துவிட்டோம். விவசாயிகளுக்காக வீராணம் ஏரியிலிருந்து தண்ணீரை திறக்கும் பிரச்சினைக்காக பா.ம.க. வந்தால், அவர்களுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியும் போராட்டம் நடத்துவோம். எங்களுக்கு தமிழ் சமூகத்தை முன்னேற்றுவது தான் முக்கியம்.எனவே, தமிழக முதல்வர் ஜெயலலிதா விவசாயிகளின் நலன்கருதி வீராணம் தண்ணீரை திறக்கவும், 32 கிராமப்புற விவசாய கிராமங்களை டெல்டா பகுதியில் இணைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்”. இவ்வாறு அவர் பேசினார்.

0 comments:

கருத்துரையிடுக