மதுரையில் அண்ணலின் நினைவுநாளும் - சாதிவெறியாட்டத்தைக் கண்டித்து கண்டன அணிவகுப்பும்


மதுரை.  திசம்பர்-6. 

இந்தியாவில் ஆதிக்க சாதியவாதிகளாலும், ஆதிக்க சாதி அரசியல் தலைவர்களாலும்.. செயற்கையாகவே புரட்சியாளர் அம்பேத்கரின் கொள்கைகளையும்... கருத்துக்களையும்   மங்கச்செய்து   கொண்டிருந்த   தருணத்தில் புரட்சியாளரின் வாரிசாக இன்று கால் நூற்றாண்டுக்கும் மேல் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஒப்பற்ற தலைவனாக,  விடுதலைச் சிறுத்தைகளை வழிநடத்திக்கொண்டிருக்கும்   எழுசித்தமிழர் அண்ணன் தொல்.திருமாவளவன் அவர்களால்  புரட்சியாளர் அம்பேத்கரின்  கொள்கைகளையும்,   கருத்துக்களையும் உலகம் முழுவதும் பரப்புரை செய்வதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி முதன்மையான,  தலையாய கடமையாக கொண்டுள்ளது.









    
    
 புரட்சியாளர்   அம்பேத்கரின்  கொள்கைகளையும்,   கருத்துக்களையும்  உலகுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக  திசம்பர்-6 ல்  சட்ட மாமேதை புரட்சியாளர் அம்பேத்கரின் நினைவுநாளையொட்டி மதுரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர்.

முன்னதாக தமுக்கம் மைதானத்திலிருந்து புறப்பட்ட மாபெரும்  கண்டன அணிவகுப்பு.... தருமபுரி,  கடலூர்,   நாமக்கல் மாவட்டங்களில் நடந்த சாதிவெறி தாக்குலை  கண்டித்தும், தமிழகத்தில் வன்முறையை தூண்டும்  சாதி சங்கங்களை ஒழிக்க  கோரியும், வன்முறையை   தூண்டிவிடும்  சாதியத் தலைவர்களை கண்டித்தும் இநத  மாபெரும்  கண்டன அணிவகுப்பில் ... வலியுறுத்தப்பட்டு   புரட்சியாளர் அம்பேத்கரின்  திருவுருவச் சிலையை சென்றடைந்தது 


இந்த  கண்டன அணிவகுப்பில் மாவட்ட செயலளர் மோ.எல்லாளன்,    இரா.பாண்டியம்மாள்,   கனியமுதன்,  அ.செல்லப்பாண்டியன், வழக்கறிஞர் இன்குலாப், பெரியார் வேந்தன்    முத்துப்பாண்டி,  , அய்யங்காளை,  மணியரசு, தென்னவன்,  பூபாலன், கொ.ஆறுமுகம் ,  ஓவியர் நா.அழகர்சாமி, பூமினாதன்,  குமார்வளவன்,  போஸ்,  மகளிர் விடுதலை இயக்கம் பாலம்மாள்,   புலியம்மால்  உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் கலந்துகொண்டனர் .


திருமா.இன் செய்திக்காக....
ஓவியர். நா. அழகர்சாமி 

1 comments:

புரட்சியாளரின் பாதையில் சாதிய வெறியர்களுக்கு கொடுப்போம் சரியான சவுக்கடி.

7 டிசம்பர், 2012 அன்று PM 11:38 comment-delete

கருத்துரையிடுக