தலித் வீடுகள் மீது தாக்குதல்: சென்னை - தர்மபுரியில் விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்


தலைவர் திருமாவளவன் எம்.பி. சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:- 

தர்மபுரி அருகே நத்தம், அண்ணாநகர், கொண்டம்பட்டி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த தலித் மக்களின் குடியிருப்புகள் மீது கடந்த 7-ந்தேதி வன்னிய சாதிவெறிக் கும்பல் தாக்குதலில் ஈடுபட்டது.


தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலையும், நாகராஜின் மரணத்தையும் தமிழக காவல் துறையின் தலையீடு இல்லாமல் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்களை அடையாளம் கண்டு அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 


சமூக நல்லிணக்கத்தை உருவாக்கும் வகையில் சமூக நல்லிணக்க கண்காணிப்பு உளவு பிரிவு ஒன்றை அரசு உருவாக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி 19-ந்தேதி சென்னையிலும் 21-ந் தேதி தர்மபுரியிலும் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். பா.ம.க.வினரும், துணை அமைப்பான வன்னியர் சங்கத்தினரும் முன்னின்று தலித் வீடுகள் மீது தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள்.


எனவே பா.ம.க. தலைவர் ராமதாஸ் இதில் தலையிட்டு பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அண்ணாமலை பல்கலைக் கழகம் 1 வாரமாக மூடப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுகிறது. இதில் தமிழக அரசு தலையிட்டு பல்கலைக்கழகத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். 


0 comments:

கருத்துரையிடுக