தமிழகத்தில் உள்ள ஆக்கிரமிப்பு பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்:


காஞ்சிபுரத்தில் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பஞ்சமி நில மீட்பு, போராளிகளின் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சூ.க. விடுதலைச்செழியன் தலைமை தாங்கினார்.மண்ணுரிமைப்ப் போராளிகளின் திருவுருவ  படத்திற்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்திய பின்னர் கட்சியின் சார்பில் சொந்தமாக வாங்கப்பட்ட  நிலத்தில்   மண்ணுரிமை போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டுவதற்க்கு அடிக்கல்  நாட்டினார்.




நிகழ்ச்சியில் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டு பேசியதாவது:- 


தமிழகத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை உடனடியாக மீட்டெடுக்க வேண்டும். தற்போது மாநிலம் முழுவதும் ஏறத்தாழ 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் உள்ளது. கடந்த பல தலைமுறையாக நாம் கல்வி, நிலம் உள்ளிட்டவைகள் இல்லாமல் வாழ்ந்துவிட்டோம். தற்போது இவைகளை பெறுவதற்காக நாம் போராடி கொண்டிருக்கிறோம். 


அரசியல் சட்டத்தை உருவாக்கிய அம்பேத்கர் பிறந்த 1881-ல் இரட்டைமலை சீனிவாசன் ஆதி திராவிட மகாஜன சபை தொடங்கி, தாழ்த்தப்பட்ட மக்களின் வளர்ச்சிக்காக பாடுபட்டார். மேலும் 1930-ல் லண்ட னில் நடைபெற்ற 2-வது வட்ட மேஜை மாநாட்டில் அம்பேத்காருடன் கலந்து கொண்ட பெருமைக் குரிய இரட்டை மலை சீனிவாசன் சட்ட மேலவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பஞ்சமி நில போராட்டத்தில் உயிர் தியாகம் செய்த சான்தாமசு, ஏழுமலை ஆகியோருக்கு நினைவு மண்டபம் அமைக்கும் வகையில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது இன்று அடிக்கல் நாட்டப்பள்ளது என்றும் விரைவில் மண்டபம் கட்டிமுடிக்கப்படும் என்றும் பேசினார். 


மேலும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்காக சென்னையின்  அமைக்கப்பட்டு வரும் கட்டிடம் விரைவில் திறக்கப்படும் என தெரிவித்தார். நிகழ்ச்சியில், பார்வேந்தன், திருமாதாசன், முத்தமிழன், புத்தேரி ஸ்டான்லி, புல்லட் சதீஷ், தம்பிதுரை, இந்திரா, ரேகா, தேன்மொழி மற்றும் காஞ்சி நகர, ஒன்றிய நிர்வாகிகள் திரளானோர் கலந்து கொண்டனர்.

0 comments:

கருத்துரையிடுக