டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
சேலத்திற்கு இன்று காலை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்.பியுமான தொல். திருமாவளவன் சென்றிருந்தார். பின்னர் அவர் நிர்வாகிகளை சந்தித்தார். பிறகு அவர் பத்திரிக்கையார்களை சந்தித்தார். பத்திரிக்கையாளர் சந்திப்பில் தலைவர் பேசியது....
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. பலர் இதற்கு பலியாகி வருகின்றனர். இதனால் இந்த நோய் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள விழிப்புணர்வு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சலைத் தடுக்க தமிழக அரசு முழு அளவிலான நடவடிக்கை எடுக்க வேண்டும். டெங்கு காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். காவிரி நீர் ஆணையத்தின் ஆணையையும், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் கர்நாடக அரசு மதிக்கவில்லை. தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகிறார்கள்.
எனவே காவிரி நதி நீர் ஆணையத்திற்கு எதிராகவும், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராகவும் நடந்து தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வரும் கர்நாடக அரசை உடனே முடக்கி வைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம். காவிரி நீர் வழங்கப்படாத நிலையில் சம்பா சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மத்திய அரசுத்தான் பொறுப்பேற்க வேண்டும். இந்த பிரச்சினை தீர்க்க ஒரே வழி நதிகள் அனைத்தும் தேசிய மயமாக்க வேண்டும். தென்னிந்திய நதிகள் அனைத்தும் இணைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் மின்வெட்டால் பெரிதும் மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். கிராம புறங்களில் 15 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சினை பற்றி கலந்து பேசி விவாதிக்க அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக