காயத்திரி படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி - க்கு மாற்றக்கோரி சென்னை மேமோரியல் அரங்கம் முன்பு ஆர்ப்பாட்டம்
நாமக்கல் விவேகானந்தா கல்லூரி மாணவி வெ. காயத்திரி படுகொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி - க்கு மாற்றக்கோரி சென்னை மேமோரியல் அரங்கம் முன்பு தலைவர் திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்.
காலங்காலமாக ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களான தலித் மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு வருகின்றது. இந்த கல்வி தீண்டாமையை எதிர்த்து போராடி, விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சில மாணவ மாணவிகள் மட்டுமே உயர்கல்வி பயில கல்விக்கூடங்களுக்கு வருகின்றனர். அப்படி வருகின்ற மாணவ மாணவிகளும் மர்மமான முறையில்
படுகொலை செய்யப்படுவதும் உயிரை மாய்த்துக்கொள்வதுமான கொடூரங்கள் அரரங்கேறி வருகின்றன.
அந்த வரிசையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரியில் பி.டெக் இரண்டாமாண்டு படித்துவந்த அருந்ததியர் சமூக மாணவி வெ. காயத்திரி அந்தக் கல்லூரியின் சேர்மன் கருணாநிதியின் மகன் ஸ்ரீநிதி அவனது 7 நண்பர்களாலும் பாலியல் வன்முறை செய்யப்பட்டு, படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.
இந்தப் படுகொலையைத் தற்கொலை என்று கல்லூரி நிர்வாகமும், அதற்கேற்றபடி காவல்துறை விசாரணையும் நடைபெற்று வருகிறது. எனவே இக்கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி- க்கு மாற்ற வேண்டும். கல்லூரி நிர்வாகத்தின் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்தக் கல்லூரி விடுதியில் இதற்கு முன் நடந்த மாணவிகளின் மரணம் குறித்து விரிவான விசாரனை நடத்தப்பட வேண்டும்.பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் தமிழகத்தில் உள்ள தலித் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.இக்கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர் திருமாவளன் கலந்து கொண்டு தனது கண்டனத்தை தெரிவித்தார். சி.பி,சி.ஐ.டி விசாரணை போதாது சிபிஐ விசாரணைக்கு உத்திரவிடவேண்ட்ம் என்றும் தலித் அமைப்புகள் கட்சிகள் ஓரணியில் இணைந்து செயல்பட்டாம் மட்டுமே இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்தமுடியும் என்றும் பேசினார். ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனத்தலைவர் திரு,அதியமான் அவர்கள் கலந்துகொண்டார். ஆர்பாட்டத்தில் கல்வியாளர்கள், படைப்பாளிகள், ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள். நற்சோனை, இரா.செல்வம் மற்றும் விடுதலைச்சிறுத்தைகளும் பங்கேற்றனர்.
புகைப்படம் : யாழ்திலீபன்
0 comments:
கருத்துரையிடுக