தூத்துகுடி – அணு உலைக்கு எதிரான உண்ணாவிரதத்தில் தலைவர் பங்கேற்பு மற்றும் அந்தோணி ஜார்ஜ் குடும்பத்திற்கு நிதி உதவி

கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது தடியடி நடத்திய காவல் துறையை கண்டித்து தூத்துக்குடி பனிமயமாதா கோவிலில் இன்று 6வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்து வருகிறது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து  தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.   கூட்டத்தில் தலைவர் பேசியதாவது, இடிந்தகரையை தமிழகம் மட்டுமின்றி அகில உலகமே திரும்பி பார்த்துக்கொண்டிருக்கிறது.








ஈழம் என்ற சொல் உலகத்தை திரும்பி பார்க்க வைத்தது போல் கூடங்குளத்தையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. அணுஉலையை கேரளாவில் அமைக்க முயன்றபோது அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடி விரட்டினார்கள். ஆனால் தமிழகத்தில் ஒற்றுமை உணர்வு இல்லாததால் இன்று நாம் அனுஉலைக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறோம்.  அனு உலைக்கு எதிராகத் தான் போராடி வருகிறோமே தவிர மின்சாரத்தை எதிர்த்து போராடவில்லை.

அனு உலையில் இருந்து ஏற்படும் கதிர்வீச்சு கழிவில் இருந்து தயாரிக்கப்படும் அனுகுண்டுகள் எவ்வளவு ஆபத்தானது என்று புரிந்து கொள்ளவேண்டும். இந்தியா ஏகாதிபத்ய நாடுகளுக்கு கட்டுப்பாட்டில் உள்ளது. எனவேதான் இந்திய பிரதமர் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி வழங்கியுள்ளார். இது அனு உலைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. ஏகாதிபத்ய நாடுகளுக்கு எதிரான, மனித உரிமைகளுக்கான போராட்டம் என்றார் திருமாவளவன் . உடல் நிலை சரியில்லாமல் மருந்து கடைக்கு மருந்து வாங்க சென்ற அந்தோணி ஜார்ஜை  கொன்ற அதிகாரியை கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும் என்றும் சிபிஐ விசாரனை மேற்கொள்ள  வேண்டும் என்று பேசினார்.

பின்பு மணப்பாடு கிராமத்திற்கு சென்று அந்தோணி ஜார்ஜ் குடும்பத்தினரை சந்தித்து  தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொண்டார் பின் அவரது குடும்பத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கினார் , அவருடைய இரண்டு மகள்களுக்கு படிப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக எழுச்சித் தமிழர் உறுதியளித்தார் ..

0 comments:

கருத்துரையிடுக