சிவகாசி பட்டாசு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பட்டாசு ஆலை விபத்தில் பலியான உயிர்களுக்கும்,பெரியார் நகர் குடியிருப்பு பகுதியை காப்பாற்ற உயிர்த்தியாகம் செய்த மண்ணுரிமை போராளி கணேசனுக்கும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. முன்னதாக விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையினை தலைவர் பார்வையிட்டார் பின் பலியான குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் தலைவர் திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-
முதலிபட்டி பட்டாசு தொழிற்சாலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு மத்திய-மாநில அரசுகள் தலா ரூ.5 லட்சம் என ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்க வேண்டும். பட்டாசு தொழிலை பாதுகாக்க பாதுகாப்பு விதிமுறைகளை அமல்படுத்தி தொழிலாளர் நலனை காக்க தமிழக அரசு தனி விசாரணை ஆணையத்தை உருவாக்கி பட்டாசு தொழிலை முறைப்படுத்த வேண்டும்.
விதிமீறல் என்ற பெயரில் பட்டாசு தொழிற்சாலைகளை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பது தொழிலில் முடக்கம் ஏற்பட்டு தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளதால் ஆய்வை கைவிட வேண்டும்.
டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு வேண்டாம் என்பதையே பெரும்பாலான மாநில அரசுகள் விரும்புவதால் பல்வேறு கட்சிகள் எதிர்ப்பதால் சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்ற முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையில் அணுசக்தி கூடாது என்ற என்ற போராட்டக்காரர் களுக்கு ஆதவு தெரிவிக்கும் வகையில் போராட்டம் நடத்துபவர்களை நசுக்குகின்ற வகையில் மத்திய-மாநில அரசுகள் ஈடுபடாமல் அங்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரபடுத்த வேண்டும்.
இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் தாக்கப் படும்போது வேடிக்கை பார்த்த கடலோர கப்பல் காவல்படை கூடங்குளம் அணுமின்நிலைய எதிர்ப்பு போராட்டக்காரர்களை மிரட்டி, அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்ற நடவடிக்கைகளை கைவிட வேண்டும்.
இவ்வாறு தலைவர் பேசினார்.
புகைப்படங்கள் : சூம் இமயம்
0 comments:
கருத்துரையிடுக