மதுரை மாவட்டம், கிழக்கே திருப்புவனம் அருகேயுள்ள சக்குடி கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கொடியேற்றம்


எழுசித்தமிழரின் ஆற்றலையும், அறிவையும்..... ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக,தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கும் '' பொன்விழா நாயகனை''.  அறிந்து கொண்ட மக்கள்  காலம் தாழ்த்தி வந்தாலும்...சிறுத்தைகளின் அடையாளத்தோடு அரசியல் சக்திகளாக உரு மாறும் அடித்தட்டு மக்கள் இதோ..... 

ஆதிக்க சாதிவெறிபிடித்த 
அண்டத்திற்க்குள், 
அடைபட்டுக்கிடந்த
அனைத்து சமுதாயத்தை சேர்ந்த
அடித்தட்டு மக்கள்   
 தங்களை போர்குணமிக்க
 போராளிகளாகவும் ..
.
சின்னா பின்னமாக  
சிதறிக்கிடந்த  கிடந்த
 சேரிகளும்
 ''சிறுத்தைகளின் கோட்டைகளாக''  
மாறிக்கொண்டிருக்கும் இவ்வேளையில்,




செப்டம்பர் 01, 2012 மதுரை மாவட்டம்,  கிழக்கே   திருப்புவனம் அருகேயுள்ள  சக்குடி கிராமத்தில், அப்பகுதி மக்கள்,போர்குணமிக்க போராளிகளாக   விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில்  தங்களை இணைத்துக் கொண்டு, தமிழ்ச்சமுதாயத்திற்கு களப்பணியாற்றிட உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். விழா  சக்குடி முகாம் செயலாளர் கண்ணன் தலைமையில்... மாவட்ட செயலாளர் மோ.எல்லாளன் கொடியேற்றி வைத்தார். . எழுசித்தமிழரின் பெயர் பலகையை முற்போக்கு மாணவர் கழக மாநிலத்துணைசெயலாளர் அ.செல்லப்பாண்டியன் திறந்துவைத்தார். 

விழாவில் நிர்வாகிகள் கொண்டையன்.ஆறுமுகம்,மசுத்தான்பட்டி ஆறுமுகம்,பி.மூர்த்தி, வரிசயூர் பூமிநாதன், ரமேசு , கல்லானை உள்பட பலர் கலந்து கொண்டனர். முகாம் நிர்வாகி கா. ராசா நன்றியுரையாற்றினார். 

திருமா.இன் செய்திக்காக......

ஓவியர். நா.அழகர்சாமி, 
மங்களபுரம் முகாம் செயலாளர்.

0 comments:

கருத்துரையிடுக