விஜயராஜ் இறந்தது கடைசி உயிராக இருக்கட்டும். இனி இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.
இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலத்தில் ஆட்டோ டிரைவர் விஜயராஜ் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவரின் உடலுக்கு தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியா வருவதற்கு கடந்த சில நாட்களாக தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இந்த நிலையில் பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜியும், மத்திய பிரதேச முதல் - மந்திரியும் ராஜபக்சேவை வரவேற்பதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துகுமார், செங்கொடி வரிசையில் விஜயராஜியும் சேர்ந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார். இதுபோன்ற உணர்வுகளில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம். 1 1/2 லட்சம் ஈழத் தமிழர்களை கொன்று குவித்து இனப் படுகொலை செய்த ராஜபக்சேவை உலக அமைதியை போதித்தவரின் புத்த கல்வி நிலையங்கள் திறப்பு விழாவிற்கு அழைப்பது முரண்பாடானது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். ராஜபக்சேவின் வருகைக்கு இந்திய அரசு தடை விதிக்க வேண்டும்.
ராஜபக்சே இந்தியா வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை (வெள்ளிக்கிழமை) சென்னையில் இலங்கை தூதரகத்தை விடுதலை சிறுத்தைகள் முற்றுகையிடும் போராட்டம் எனது தலைமையில் நடைபெறும். தமிழர்களுக்காக விஜயராஜ் இறந்தது கடைசி உயிராக இருக்கட்டும். இனி இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம். இவ்வாறு தொல். திருமாவளவன் எம்.பி. கூறினார்.
தீக்குளித்து பலியான விஜயராஜின் குடும்பத்துக்கு விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. ரூ. 25 ஆயிரம் நிதி வழங்கினார். அப்போது மாவட்ட செயலாளர் நாவரசன், தலைமை நிலைய செயலாளர் பாவரசு, மாநகர செயலாளர் பாவேந்தன், துணை செயலாளர் இமயவர்மன், மாவட்ட முற்போக்கு கழக செயலாளர் வசந்த் மற்றும் ஏராளமான விடுதலைச் சிறுத்தைகள் உடனிருந்தனர்.

0 comments:
கருத்துரையிடுக