மதுரை வண்டியூர் தீர்த்தக்காடு கரிகாலன் படுகொலை




 



மதுரை வண்டியூர் தீர்த்தக்காடு பகுதியில் ஆண்டாண்டு காலமாக குடியிருந்து வரும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்களுக்கு அரசு பட்டா வழங்க மறுத்து வந்தது .

இந்த மக்களின் நிலையை கண்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அப்பகுதி மக்களோடு இணைந்து ஆர்ப்பாட்டங்கள் , சாலை மறியல்கள் மற்றும் உண்ணாவிரதங்கள் என எத்தனையோ போராட்டங்கள் நடத்தி தீர்த்தக்காடு மக்களுக்கு குடியிருப்புக்கான பட்டாக்களை அரசிடம் போராடிப் பெற்றுத் தந்தது .

ஆனால் காலப்போக்கில் தாழ்த்தப்பட்ட குடியிருப்புக்குள் ஊடுருவிய பணம் படைத்த ஆதிக்க சாதியினர் தீர்த்தக்காடு பகுதி முழுவதும்  ஆக்கிரமிப்பு செய்துவிட்டனர் , இது சம்பந்தமாக அரசு அதிகாரிகளிடம் எத்தனையோமுறை முறையிட்டும் அரசு அதிகாரிகள் ஆதிக்க சாதியினருக்கு ஆதரவாகவே இருந்து வருகின்றனர் .

இந்த ஆதிக்க சாதியனரை அப்புறபடுத்தவும்,அந்த இடத்தை உரிமை உள்ளவர்களிடம் ஒப்படைக்கவும் வழக்கு தொடரப்பட்டு நீதி மன்றத்தின் தீர்ப்பு வரும் தருவாயில் உள்ளது.

இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பாக  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த கண்ணன் என்பவர் ஆதிக்க சாதிவெறியர்களால்  வெட்டி படுகொலை செய்யப்பட்டார் .

தற்போது அதே பிரச்சனையில் தீர்த்தகாடு பகுதியை சேர்ந்த மலைச்சாமி என்பவரின் மகனும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இளம் சிறுத்தை எழுச்சி பாசறையின் முகாம் செயலாளருமான தம்பி கரிகாலன் நேற்று மாலை (25.09.2012) 6.00 மணியளவில் தீர்த்தக்காட்டில் 9பேர் கொண்ட கொலைவெறி கும்பலால் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

இதுவரை காவல் துறை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்காததால் ஆத்திரமடைந்த விடுதலை சிறுத்தையினர் கொலையுண்ட போராளியின் உடலை வாங்க மறுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை முன்பாக சாலைமறியலில் ஈடுபட்டனர் .

                   
அப்போது அங்கு காவல்துறை உதவிஆணையர் வெள்ளத்துரை  வரவே விடுதலை சிறுத்தையினருக்கும் காவல் துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்ப்பட்டது.
                   
அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்ற விடுதலை சிறுத்தையினர் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முயன்ற போது காவல் துறையினர் முன் வாசலை மூடவே சற்று பதற்றமானது.


இருந்தபோதிலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகையிடப்பட்டது . பிறகு விடுதலை சிறுத்தையினரை சந்தித்த மாவட்ட ஆட்சியர் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார்.அப்போது  விடுதலை சிறுத்தையினர் மாவட்ட ஆட்சியரிடம்....போராளியின் பெற்றோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் மேலும்  குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடிக்கும் என எச்சரித்து போராளி கரிகாலனின் உடலை பெற்றுக்கொண்டனர்.பின்னர் மாலை ஆறு மணியளவில் விடுதலை சிறுத்தைகள் அடக்கு முறைகளுக்கு எதிரான கோசங்கள் முழங்க போராளி கரிகாலனுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது .

இப்போராட்டத்தில் ஏ.சி.பாவரசு,அ.செல்லப்பாண்டியன்,கனியமுதன், முத்துப்பாண்டி, அதிவீரபாண்டியன் , அய்யங்காளை, ஓவியர் முதல்வன் , மணியரசு, பனையூர் சேகர்,  பூபாலன், ஆறுமுகம் ,குமார்வளவன் ,  ஓவியர் நா.அழகர்சாமி  மற்றும்  ஆயிரக்கணக்கான சிறுத்தைகள் கலந்துகொண்டனர்.  




தப்பியோடுவதற்கு எவ்வளவோ வழியிருந்தும் 
கறை வேட்டி கட்டிய சிறுத்தடா.....என்று சொல்லி   
ஒற்றை சிறுத்தையாய் 
களத்தில் நின்று 
களையுறாமல் 
களமாடி களப்பலியான 
கரிகாலனுக்கு............ 
விடுதலைச் சிறுத்தைகளின் 
வீர வணக்கம்...வீர வணக்கம்...

0 comments:

கருத்துரையிடுக