கூடங்குளம் அணு உலைக்கு எதிராக நடப்பது மக்களின் வாழ்வுரிமைக்கான போராட்டம்: திருமாவளவன் எம்.பி. பேச்சு


அணு உலையை மூட வலியுறுத்தி இடிந்தகரையில் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நேற்று இதில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- 


கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி 416-வது நாளாக தொடர் போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டம் அனைத்து அரசியல் கட்சியினரையும் சிந்திக்க வைத்திருக்கிறது. பல்வேறு நோக்கங்களுக்காக அரசியல் கட்சிகள் இயக்கங்களை நடத்துகின்றன. ஆனால் இங்கு தங்கள் வாழ்வாதாரத்தை காப்பாற்ற மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துகிறார்கள். ஆனால் மத்திய, மாநில அரசுகள் இப்போராட்டத்தை திசை திருப்பும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றன.  



கூடங்குளம் அணு உலை பாதுகாப்பு விசயம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தற்போது தெரிவித்துள்ள கருத்துக்கு இடிந்தகரை மக்களின் அறவழிப்போராட்டமே காரணம். பிற மாநிலங்களில் பொது பிரச்சினைகளுக்கு கட்சிகள் இணைந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் அவ்வாறு கட்சிகள் ஒன்றிணைந்து போராடுவதில்லை. 



வருகிற 8-ந்தேதி நடைபெற உள்ள அணு உலை முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பங்கேற்கும். 29-ந்தேதி நடக்கும் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தில் நானும் பங்கேற்பேன் என்றார்.

1 comments:

so very good the great leader of our party thiru thirumavalavan m p
speech . he became the c m of tamil nadu in futures i will belive the matter will be done with in the 10 years of the tnmil nadu political histry

15 அக்டோபர், 2012 அன்று 8:55 AM comment-delete

கருத்துரையிடுக