தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிந்த தலைவர் காமராஜர் - திருமா புகழாரம்


இன்று காமராஜர் பிறந்த நாளை ஒட்டி விடுதலை சிறுத்தைகள் சார்பில் "பெருந்தலைவர் பெருவிழா " நடைபெற்றது .முன்னதாக காலை காமராஜர் திருஉருவ சிலைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார்...

பின்னர் மாலை நடந்த பெருவிழா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் சிறப்புரையாற்றும் போது :

"நாடாளுமன்ற நிகழ்வுகளை ஒத்திவைத்து விட்டு காமராஜருக்கு நன்றி செலுத்தும் இந்த விழாவை நான் தலைமை ஏற்று சிறப்பாக நடத்த வேண்டும் என்று இரவு சென்னை வந்தேன். காமராஜர் எளிமையின் வடிவமாக திகழ்ந்தவர்.

அதிகாரத்தின் உச்சியில் இருந்த போதும் இயல்பான வாழ்க்கை வாழ்ந்த மாபெரும் தலைவர் காமராஜர். தலைவர்கள் பலரும் ஒரு முன்னுதாரனமாக சிறந்த தலைவர்களை எடுத்து கொள்வார்கள்...

அப்படிபட்ட தலைவர்கள் வரிசையில் சமூக தொண்டு செய்ய விரும்பும் தோழர்களுக்கு காமராஜர் ஒரு சிறந்த முன்னுதாரணம்...

ஒரு எளிமையான மனிதனாய் வாழ்ந்த அவரிடம் தான் இந்த நாட்டின் பிரதம மந்திரியை தேர்ந்தெடுக்கும் மிக பெரிய பொறுப்பு வழங்கபட்டது அந்த தலைவன் தன்னை தாழ்ந்து நினைத்ததில்லை....

இந்தியாவின் வளர்ச்சி திட்டங்களுக்கு கே-பிளான் என்ற காமராஜர் பெயரைசூட்டினார்கள்.

தாழ்வு மனப்பான்மையை உடைத்தெறிந்த தலைவர் காமராஜர் ..

மக்களை நேசித்த தலைவர் காமராஜர்..

அழகு என்றால் ஆற்றல், அழகு என்றால் எளிமை,அழகு என்றால் தூய்மை ,உன்னதம் அதற்கு சாட்சி காமராஜர் அவர்கள் ..

அந்த பெரும் தலைவருக்கு எடுக்கும் இந்த விழா நாம் அவருக்கு செலுத்தும் நன்றி கடன்..

அடுத்த ஆண்டு பெரும்தலைவரின் பிறந்தநாள் விழா இதை விட மிகச் சிறப்பாய்... மிகப்பெரிய அளவில் திட்டமிட்டுள்ளோம்.

நாம் பெரும்தலைவருக்கு விழா எடுப்பது அவரது ஓட்டு வங்கிக்கோ அம்மக்களை நம் பக்கம் இழுப்பதற்கோ அல்ல அவர் ஏழை எளிய ஒடுக்கப்பட்ட மக்களுக்காக ஆற்றிய பணிக்காக கொண்டாடப்பட வேண்டிய தலைவர் என்பதற்காகவே.

அவரது வாழ்க்கை வரலாற்றை அனைவரும் அறியும் வகையில் மிக குறைந்த விலையில் புத்தகமாக வெளியிட வேண்டும் என்று கலைகோட்டுதயம் அவர்களை கேட்டுகொண்டேன் அதன்படி அக்டோபரில் வருகிற அவரது நினைவு நாளில் இந்த புத்தகத்தை வெளியிட விடுதலை சிறுத்தைகள் முயற்சி செய்யும் " இவ்வாறு உரையாற்றினார்..

இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் குகநாதன், கட்சியின் பொது செயலாளர் கலை கொட்டுதையம்,தலைமை நிலைய செயாலாளர் வன்னியரசு,மாநில ஊடகதுறை செயலாளர் ஆர்வலன் உட்பட முக்கிய நிர்வாகிகளும் கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டனர்.....


-


0 comments:

கருத்துரையிடுக