போரூரில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை தொல்.திருமா சந்தித்து நிவாரண உதவி வழங்கி ஆறுதல்

சென்னையையடுத்த போரூரில் ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து நிவாரண உதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.

சென்னையையடுத்த போரூரிலுள்ள திருவீதியம்மன்கோவில்தெருவில் நேற்று அதிகாலை திடீரென்று தீப்பிடித்தது. தீ மளமளவென பரவி அருகில் இருந்த வீடுகளிலும் பரவியது. இதனால் நாற்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் தீக்கிரையாயின. இதில் சுமார் ரூபாய் 30லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.

தீவிபத்தில் பாதிக்கப்பட்டவர்களை விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்து பாய், வாளி, சேலை, வேட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கி ஆறுதல் தெரிவித்தார். மாநிலப்பொதுச்செயலாளர் கா.கலைக்கோட்டுதயம், தலைமைநிலையச் செயலாளர் வன்னியரசு உள்ளிட்ட கட்சிநிர்வாகிகள் உடனிருந்தனர்.

0 comments:

கருத்துரையிடுக