வணங்காமண் கப்பலை வெளியேற்ற நடவடிக்கை: திருமாவளவன் கண்டனம்
இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக நிவாரணப் பொருட்களுடன் ஐரோப்பியாவில் இருந்து வந்த வணங்காமண் கப்பலை சென்னை துறைமுகத்தில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வன்னிப்பகுதியில் வதை முகாம்களில் சிக்கி சிதைந்து வரும் ஈழத்தமிழர்களுக்கு என ஐரோப்பிய வாழ் தமிழர்கள் கடந்த மே மாதம் சுமார் 884 டன் எடையுள்ள உணவு மற்றும் மருந்து பொருட்களை 'கேப்டன் அலி' என்னும் 'வணங்காமண்' கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.
ஈவு இரக்கம் இல்லாத சிங்கள இனவெறியர்கள் அதனை அனுமதிக்கவில்லை. சுமார் 2 மாதங்களாக அந்த கப்பலும் ஓர் அகதியை போல, நடுக்கடலில் தத்தளித்து தவிக்கிறது. அந்த கப்பலில் பணியாற்றும் ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கின்றனர்.
சென்னை துறைமுகத்தில் அப்பொருட்களை இறக்குவதற்கு இந்திய அரசும் அனுமதி அளிக்கவில்லை என்பது இந்திய அரசின் ஈரம் இல்லாத அரக்கத்தன்மையை வெளிப்படுத்துகிறது. அப்பொருட்களை தமிழ்நாட்டில் உள்ள அகதிகளுக்கு வழங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் எனவும், அதனை விடுதலை சிறுத்தைகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் பெரும் முயற்சிகளை மேற்கொண்டோம்.
ஆனால் அதிகாரிகள் அதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்பதுடன் அக்கப்பலை வெளியேறும்படி எச்சரித்துள்ளனர். 'இந்தியனை விட சிங்களவனே மேல்' என்று கூறும் அளவிற்கு இந்திய அரசின் போக்கு கொடூரமாக உள்ளது. இந்திய அரசின் தமிழின விரோத, மனித நேயமற்ற போக்கை விடுதலை சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.

0 comments:
கருத்துரையிடுக