மேதகு பிரபாகரன் மரணம் பற்றிய சந்தேகங்கள் - திருமா


"தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் மரணம் என்றும் அதில் சந்தேகம் என்றும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன ..

இந்நிலையில் விடுதலை புலிகளை தமிழகத்தில் பகிரங்கமாக ஆதரித்தவரும், விடுதலை புலிகள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று பல போராட்டங்கள் கருத்துரிமை மாநாடு ,தமிழீழ அங்கிகர மாநாடு என்று தொடர்ந்து ஈழ தமிழருக்காக போராடி வரும் போர் குணம் வாய்ந்த இயக்கத்தை தலைமை ஏற்று நடத்தி வருகின்ர்ரவரும் , பொடா சட்டம் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில் ஈழம் சென்று தேசிய தலைவரை சந்தித்து வந்தவரும்,ஈழ தமிழர் பிரச்சனை தீர்க்க வேண்டி சாக துணிந்த அந்த இளம் தலைவர் தொல் .திருமாவளவன் (நா.ம.உ ) அவர்கள் தேசிய தலைவரை பற்றி வரும் செய்திகளுக்கு அளித்த விளக்கங்கள் உங்கள் முன்னே..

" தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு இருக்கிறார் என்று தமிழீழ விடுதலை புலிகளின் உளவு துறை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது .ஆகவே உலக தமிழினம் நம்பிக்கையோடும்,ஆதரவோடும் செயல்படவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் சார்பாக தெரிவித்து கொள்கிறேன்..

தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் நேரில் சந்தித்தவன் என்கிற முறையில் அவரது போர்குணத்தை கண்டு வியந்தவன்.உலகில் இன்று எவரோடும் ஒப்பிட முடியாத வீரம் செறிந்த மாவீரன் தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள்

எவ்வளவு நெருக்கடி வந்தாலும் எதிர் கொள்ள என்கிற முனைப்பை கொண்டவரே தவிர அதைவிடுத்து உடனடியாக சமரசமாக வேண்டும் என்றோ தனை மாய்த்து
கொள்ள வேண்டும் என்றோ நினைகிறவர் அல்ல ..

சிங்களவர்கள் நடத்தும் நாடகம் மக்கள் முன் எடுபடாது ஈழ போரை மேதகு தேசிய தலைவர் பிரபாகரனின் தலைமையில் விடுதலை புலிகள் முன்னெடுபார்கள்...


இந்த நான்காவது ஈழ போர் சற்று பின்னடைவு ஏற்பட்டாலும் அடுத்தகட்ட போர் தலைவரின் தலைமையில் வெற்றிகரமாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது..

உலக நாடுகளே வியக்கும் ராணுவ நுணுக்கங்களை தெரிந்த ஒரு மாவீரன் தான் மேதகு பிரபாகரன் அவர்கள் . அவரது தலைமையில் விரவேசதொடு விடுதலை புலிகள் வெல்வார்கள் என்றும் நம்புகிறேன்...

சிங்கள இன வெறியர்கள் காட்டிய காட்சிகள் அப்பட்டமான ஒப்பனை.பிரபாகரன் உடல் என்று அவர்கள் காட்டிய உடலில் தெரிந்த முகம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் அவரது முகம் எப்படி இருந்ததோ அதை போல் இருந்தது.ஐம்பத்து நான்கு வயதாகும் அவரது முகத்திற்கும் அவர்கள் காட்டிய முகத்திற்கும் தொடர்பே இல்லை என்பது என் ஆழமான கருத்து.

மேலும் அவரை நாங்கள் கொன்று விட்டோம் என்று அறிவித்த அறிவிப்பில் நிறைய குழபங்கள் உள்ளன.முதலில் அவரது உடல் எரிந்து விட்டது என்றார்கள் பின்னர் அடுத்த நாள் நீரில் இருந்தாக ஒரு உடலை காட்டினார்கள்.

இறந்த பின்னர் ஒரு உடல் சில மணி நேரங்களில் விரைபடைந்து விடும் இதை மருத்துவத்தில் ரியல் மார்பிஸ் (Real Morphis ) என்று சொல்லுவார்கள்.அப்படி ஒரு நாள் முழுவதும் இறந்த உடல் உடனடியாக விரைபடையும் என்பது தான் உண்மை.


அவர்கள் காட்டிய படத்தில் கழுத்து இலகுவாக அசைகிறது.எனவே இவர்கள் காட்டிய உடல் அப்பொழுது தயார் செய்யபட்ட உடல்.


மேதகு பிரபாகரன் அவர்கள் உயிரோடு தான் இருக்கிறார்.அவர் மீண்டும் எழுவார் ஈழ போர் மீண்டும் வெடிக்கும் "



0 comments:

கருத்துரையிடுக