ஈழத் தமிழர்களைக் காப்போம் மதுரை, திருச்சியில் பேரணியும்- பொதுக்கூட்டமும் சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்


ஈழத் தமிழர்களைக் காப்போம்
மதுரை, திருச்சியில் பேரணியும்- பொதுக்கூட்டமும்
சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம்

சென்னை, மே 23- ஈழத் தமிழர்களைக் காப்போம் என்னும் பெயரில் சென்னையில்
பொதுக்கூட்டமும், திருச்சி, மதுரை ஆகிய ஊர்களில் பேரணியும், பொதுக்கூட்டமும்
நடைபெற உள்ளது.

ஈழத் தமிழர் வாடிநவுரிமை மீட்பு இயக்கத்தின் கூட்டம் சென்னை பெரியார் திடலில் இன்று
(23.5.2009) காலை 10.30 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களின்
தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில், தொல். திருமாவளவன் எம்.பி., பேராசிரியர் சுப. வீரபாண்டியன்,
பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன், பொன். குமார், கவிஞர் மு. மேத்தா ஆகியோர்
கலந்துகொண்டனர்.

கீடிநக்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
1. “ஈழத் தமிழர்களைக் காப்போம்!” எனும் பொருளில் கீடிநக்கண்ட ஊர்களில் பேரணியும்,பொதுக்கூட்டமும் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
கூட்டத்தில் ஈழத் தமிழர் வாடிநவுரிமை மீட்பு இயக்கத்தைச் சேர்ந்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்பது என்று முடிவு செய்யப்படுகிறது

1.6.2009 மாலை சென்னை - சைதாப்பேட்டை தேரடி தெருவில் (பொதுக்கூட்டம் மட்டும்).
7.6.2009 மாலை திருச்சி - பேரணியும், பொதுக்கூட்டமும்.
13.6.2009 மாலை மதுரை - பேரணியும், பொதுக்கூட்டமும்.
பேரணி, பொதுக்கூட்டத்தின் நோக்கங்கள் வருமாறு:-

1. ஈழ மண்ணில் உணவின்றியும், மருந்தின்றியும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும்
பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களுக்குப் பன்னாட்டுப் பார்வையாளர்களின் முன்னிலையில்
செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உதவிகள் செய்து அவர்களைக் காப்பாற்றவேண்டும்.
2. சொந்தத் தேசத்தில் அகதிகளாக வாழும் அம்மக்களை, அவரவர் பகுதிகளில் மீள் குடியேற்றம் செய்திட உலக நாடுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.
3. தமிழின அழிப்பையே நோக்கமாகக் கொண்டு, தமிழீழ மக்களை அழித்தொழித்த
ராஜபக்சேயைப் போர்க் குற்றவாளியாக உலக நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்.

4. தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் குழு ஒன்று, உடனடியாக இலங்கை சென்று உண்மைகளைக் கண்டறிய இந்திய அரசு ஏற்பாடு செய்திட வேண்டும் .

5. இலங்கைக்கான இந்தியத் தூதுவராகத் தமிழர் ஒருவரே உடனடியாக நியமிக்கப்படவேண்டும்.

மேற்கண்ட தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.


0 comments:

கருத்துரையிடுக