இந்திய அரசு தமிழின விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும்: திருமாவளவன்


இந்திய அரசு தமிழின விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும்: திருமாவளவன்

இந்திய அரசு தமிழின விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழீழ விடுதலைப் போரை கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக முன்னெடுத்து சென்ற தமிழீழ விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகள் என முத்திரைகுத்தி பல்வேறு உலக நாடுகளின் ஒத்துழைப்போடு சிங்கள இன வெறி அரசு, பயங்கர வாதத்தை ஒழிப்பதற்க்கான நடவடிக்கை என்னும் பெயரில் காட்டுமிராண்டி தனமான தாக்குதலை நடத்தி பல்லாயிரகணக்கான பொதுமக்களையும் வேட்டையாடி கொன்று குவித்ததை உலகறியும். மனிதநேயத்தையோ, அனைத்துலக மரபுகளையோ துளியளவும் பின்பற்றாமல் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள இன வெறியர்கள் திட்டமிட்ட இனபடுகொலையை நடத்தினர்.



கடந்த சில நாட்களுக்கு முன் இறுதிப்போர் எனும் பெயரில் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த மொத்த நிலபரப்பையும் கைபற்ற வேண்டும் என்ற வெறியில் உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் ஒரே நாளில் ஏறத்தாழ 50 ஆயிரம் மக்களை படுகொலை செய்துள்ளது. என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அதில் புலிகளின் முன்னனித் தலைவர்கள் நடேசன், பூலித்தேவன் போன்ற ஒரு சிலரும் வீர சாவு அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.

இத்தகைய மூர்கத்தனமான கொலை வெறியாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பலியாகி இருப்பது அம்பலப்பட்டு விடக்கூடாது என்பதற்க்காகவே ஊடகவியலாளர்கள் எவரையும் போர்ப்பகுதிக்குள் இதுவரையில் சிங்கள இனவெறி அரசு அனுமதிக்கவில்லை.

இந்நிலையில் இன வெறியன் இராசபக்சே அனைத்துலக போர் மரபுகளை மீறி போர்குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாக அமெரிக்கா, ஜெர்மனி, இங்கிலாந்து போன்ற நாடுகள் எல்லாம் ஒருங்கினைந்த அய்.நா பேரவையில் உள்ள மனித உரிமைகள் பாதுகாப்பு பேரவையின் சிறப்புக்கூட்டம் ஒன்றை வரும் மே 26-ஆம் நாள் நடந்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, கனடா, இத்தாலி உள்ளிட்ட 17 நாடுகளில் முன் முயற்சியில் வரும் 26.5.2007 ஆம் நாள் அச்சிறப்பு கூட்டம் நடைபெற்ற உள்ளது. அதே வேளையில் சிங்கள இனவெறி அரசின் தமிழினத்திற்க்கு எதிரான நடவடிக்கைகளை வரவேற்றும், ஆதரித்தும் ஒரு சில நாடுகள் முன்மொழிந்துள்ளன. குறிப்பாக பாகிஸ்தான், சீனா, இந்தோனேசியா, கியூபா மற்றும் அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் அது உள்நாட்டு பிரச்சனை என்றும், அதில் பிற நாடுகள் தலையிட கூடாது என்றும் புலிகளிடமிருந்து பொது மக்களை மீட்பதற்க்காக சிங்கள அரசு போராடியது என்றும் அந்த வகையில் சிங்கள அரசுக்கு பொருளாதார உதவிகள் செய்ய அனைத்துலக நாடுகள் வலியுறுத்துகின்றன.

குறிப்பாக இந்திய அரசு சிங்கள ஆட்சியாளர்களுக்கு உதவுவதில் மிகத்தீவிரமாக உள்ளதை அறிய முடிகிறது. இந்திய அரசின் இத்தகைய போக்கு ஒட்டு மொத்த தமிழ் இனத்துக்கும் செய்கிற மாபெரும் துரோகமாகும்.



இந்திய அரசின் இந்த தமிழ் இன விரோத போக்கை விடுதலை சிறுத்தைகள் மிகுந்த வேதனையோடு மிக வண்மையாக கண்டிக்கிறது. உடனடியாக இந்திய அரசு தமிழ் இனத்திற்கு எதிரான நடவடிக்கையை கைவிட வேண்டுமெனவும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு உதவ கூடாது என்றும் விடுதலை சிறுத்தைகளின் சார்பில் மிக அழுத்தமாக வலியுறுத்துகிறோம்.



தமிழர்களுக்கு எதிரான போர்குற்றங்கள் புரிந்த சிங்கள அரசுக்கு எதிரான சிறப்பு கூட்டம் ஒன்றை கடந்த மே-15 ஆம் நாள் கூட்டுவதற்க்கு மேற்குலக நாடுகள் முயற்சியை தடுத்துள்ளன. அணி சேரா நாடுகளின் தூதர்களின் கூட்டத்தில் சிங்களவர்களுக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் இந்தியா முதன்மையான பங்கு வகித்துள்ளதையும் அறிய முடிகிறது. இந்திய அரசு இத்தகைய போக்குகளை உடனடியாக கைவிடவேண்டும் எனவும், சிங்களவர்களுக்கு ஆதரவான தீர்மானத்தை வழிமொழிய கூடாது எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
----- தொல்.திருமாவளவன்





1 comments:

//***இந்திய அரசு தமிழின விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார் ***//
தமிழ் மக்கள் எவ்வுளவுதான் கெஞ்சுகேட்டாலும் இந்தியா செவிசாய்க்காது, (இந்தி)ய அரசாங்கத்துக்கு தமிழ்நாடும், தமிழ்நாட்டில் உள்ள வளங்கள் மட்டுமே தேவை தமிழும் தமிழர்களும் அவர்களுக்கு என்றுமே தேவைபடுதில்லை, இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் தமிழ்கள் இந்தியாவில் இருக்கும்வரை ஹிந்தியர்களுக்கு அடிமையாகத்தான் இருக்கவேண்டும் இதுவல்ல விடுதலை, தமிழ்நாடு தனிநாடாக திகழவேண்டும்( சிலர்,இது நடாக்காது என்று சொல்லலாம் அது அவர்களின் அடிமைதனத்தையும், இயலாமையும் காட்டுகிறது, நம்மைவிட சிறிய எத்தனையோ நாடுகள் தனி நாடாக சிறந்து விளங்குகிறது என்பதை உணரவேண்டும்), தமிழ்நாடு இந்தியாவுடன் இருந்தாலும் சுயாட்சியாய் திகழவேண்டும் முப்படைகளிலும் தமிழகம் சிறந்து விளங்க வேண்டும் அப்பொழுதுதான் நாம் யாரையும் எதிர்பார்காமல் நம் மக்களை நாம் பாதுகாக்க முடியும், மேலும் தமிழகத்தில் மொழி அலட்சியம் அதிகமாக இருந்து வருகிறது, இதை தடுக்கவேண்டும் தமிழர்கள் இங்கிருந்து வடக்கே சென்றாலும் இந்திகாரன்தான் அதிகாரம் செய்கிறான் அவன் பிழப்புதேடி தமிழகம் வந்தாலும் அவன்தான் அதிகாரம் செய்கிறான் கூடவே அவன் மொழியும் நம் மொழியை அதிகாரம் செய்கிறது, சென்னை சென்ட்ரலில் ஆரம்பித்து அவன் போகும் வழி எங்கும் இந்தியை தமிழக மக்களிடம் இருந்து எதிர்பார்கிறாரன், நம் மக்கள் அங்கு சென்றாலும் இந்தி தெரிந்திருக்க வேண்டும் மாறாக அவர்கள் பிழப்புகாக இங்கு வந்தாலும் நாம் அவர்களுக்காக இந்தி தெரிந்துவைத்திருக்க வேண்டும் இதைவிட கேடுகெட்ட நிலமை வேறுயிருக்காது, இதை உணர்ந்து தமிழ மக்களாகிய நாம் தமிழ்நாட்டில் தமிழில் பேசுவோம் அப்பொழுதுதான் பிழப்பு தேடிவருபவர்களும் கற்க நினைப்பார்கள், மொழியும் பிறயிடங்களில் பரவும்
வாழ்க தமிழ்

25 மே, 2009 அன்று 1:31 PM comment-delete

கருத்துரையிடுக