மேதகு பிரபாகரன் அவர்கள் விடுதலைப்போரை மேலும் வழி நடத்துவார் - திருமா அறிக்கை
தொல். திருமாவளவன் அறிக்கை
கடந்த 6 மாத காலமாக தமிழக மக்களும் புலம் பெயர்ந்து வாழும் உலகத்தமிழர்களும் எவ்வளவோ மன்றாடிக்கேட்டும் கடுமையாகப் போராடியும் இந்தியாவோ சர்வதேசச் சமூகமோ எமது ஈழத்தமிழ்ச்சொந்தங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை என்பது எக்காலத்திலும் ஆற்றுப்படுத்த முடியாத வேதனையை அளிக்கிறது. சிங்கள இனவெறியர்கள் திட்டமிட்டவாறு எமது இனத்தை கொத்துக் கொத்தாகப் படுகொலைசெய்து அழித்தொழித்துவிட்டனர்.
உச்சகட்டமாக எமது மக்களின் ஒரே பாதுகாவலர்களாக விளங்கிய தமிழீழ விடுதலைப்புலிகளையும் கொடூரமான முறையில் படுகொலை செய்துள்ளனர். உலகத்தமிழினத்தை தலை நிமிரச்செய்த தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களையும் படுகொலை செய்துவிட்டதாக சிங்கள இனவெறிக்கும்பல் கொழும்பு நகரில் கும்மாளமடித்து கொண்டாடிக் கொண்டிருக்கிறது.
மேதகு பிரபாகரன் அவர்கள் படுகொலையனாரா? அல்லது பாதுகாப்பாக உள்ளாரா? என்ற ஆராய்ச்சி ஒருபுறம் இருந்தாலும் ஈழத்தில் எமது மக்கள் கடந்த 2 நாட்களில் 50,000க்கும் மேல் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மேலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் கொல்லப்படலாம் என்று அஞ்சப்படுகிறது. ஈவிரக்கமற்ற இத்தகைய இனப்படுகொலையை உலகின் பார்வையிலிருந்து மூடிமறைப்பதற்காகவும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளின் கடைசிகாலத் தடுப்பு முயற்சிகளை முறியடிக்கவும் சிங்கள இனவெறியன் இராஜபக்சே பல்வேறு நாடகங்களை நடத்துவதாகத் தெரிகிறது. இந்நிலையில் இந்தியாவும் சர்வதேசச்சமூகமும் மனிதாபிமான அடிப்படையில்கூட இந்தக் கொடூரமான இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முன்வரவில்லையே என்பது தான் சகித்துக்கொள்ளவே முடியாத வேதனையாகவுள்ளது. உலகமெங்கும் எட்டுக்கோடித் தமிழர்கள் இருந்தும் முல்லைத்தீவில் எமது மக்களும் எமது தலைவர்களும் கேட்பாரற்ற அனாதைகளைப்போல படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் இரத்தக்கண்ணீரை வடிக்க வைக்கிறது.

ஆயுதங்களை கீழே போடவும் தயார் என்றும், எத்தகைய தீர்வுக்கும் தயார் என்றும் புலிகளின் தலைவர்கள் அதிகாரபூர்வமாக அறிவித்த பின்னரும், ஆயுதமில்லாத நிலையில் வெள்ளைக்கொடி ஏந்தியவாறு சிங்களப்படை அதிகாரிகளைச் சந்திக்க முன்வந்த புலிகளின் தலைவர்கள் நடேசன், பூலித்தேவன் போன்றவர்களை மிகக்கேவலமான முறையில் சிங்கள இனவெறியர்கள் படுகொலை செய்திருப்பது வரலாற்றில் இல்லாத மனித நாகரிகத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.இந்நிலையில் மாவீரர்களாய் களப்பலியான எமது விடுதலைப்போராளிகளுக்கும் அப்பாவிப் பொதுமக்களுக்கும் எமது செம்மாந்த வீரவணக்கத்தை செலுத்துகிறோம். புலிகளின் தலைவர்கள் அழிக்கப்பட்டாலும் ஈழவிடுதலைப்போரை அழிக்க முடியது. இருந்தாலும் மறைந்தாலும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் அந்த விடுதலைப்போரை மேலும் வழி நடத்துவார். சிங்கள இனவெறியன் இராஜபக்சேவின் காட்டுமிராண்டித்தனமானக் கொலைவெறித்த்னத்தை விடுதலைச்சிறுத்தைகள் மிகவன்மையாகக் கண்டிப்பதோடு அவனை சர்வதேச நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி தண்டிப்பதற்குரிய அடுத்தக்கட்டப் பணிகளை மேற்கொள்வது விடுதலைச்சிறுத்தைகளின் கடமையாகும் என்று கருதுகிறோம்.
புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் உலகத்தமிழர்கள் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கு சோர்வடையாமல் ஒருங்கிணைந்து போராட முன்வரவேண்டும் என்று விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
இது தொடர்பாகவும், தேர்தல் முடிவுகள் தொடர்பாகவும், அடுத்தக்கட்டப் பணிகள் தொடர்பாகவும் கலந்துரையாட நாளை 21.05.2009 காலை 10 மணியளவில் சென்னையில் விடுதலைச்சிறுத்தைளின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் நடக்கவுள்ளது என்றும் தெரிவித்துக்கொள்கிறோம்.
----- தொல். திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக