ராஜபக்சேயை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் - திருமா
இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டதை கண்டித்து சென்னையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி தலைமை தாங்கினார்.
சென்டிரல் மெமோரியல்ஹால் அருகே நடந்த இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
திருமாவளவன் எம்.பி., திராவிடர் இயக்க தமிழர் பேரவை அமைப்பாளர் சுப.வீரபாண்டியன், இரா. ஜனார்த்தனம் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் ராஜபக்சேயை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள். போராளிகள் புதைக்கப்படுவது இல்லை. விதைக்கப்படுகிறார்கள், வீர வண்ணம் வீர வணக்கம்... போரில் வீழ்ந்த ஈழத்தமிழர்களுக்கு வீர வணக்கம் என்பது போன்ற கோஷங்களை எழுப்பினார்கள்.
ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன்,
விடுதலைப்புலி தலைவர் பிரபாகரன் இலங்கை தமிழர்களுக்காக கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுபவர். அவர் இறந்ததாக பல தடவை கூறி உள்ளார்கள். ஆனால் மீண்டும் உயிரோடு வந்து யுத்த களத்தில் போராடி இருக்கிறார்.
அது போலத்தான் இப்போதும் பிரபாகரன் கொல்லப்படவில்லை. அவர் இறந்து விட்டதாக வதந்தியை பரப்புகிறார்கள்.
பல்லாயிரக்கணக்கான ஈழத் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சேயை சர்வதேச போர் குற்றவாளியாக அறிவிக்க வேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு புது வாழ்வு தேவைப்படுகிறது. உணவு, மருந்து, உடை இல்லாமல் ஆயிரக்கணக்கான தமிழர்கள் பரித விக்கிறார்கள். அவர் களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும்.
இலங்கை அரசிடம் கெஞ்சி கேட்பதில் பயன் இல்லை. இரும்பு கரம் கொண்டு இலங்கை அரசை இந்தியா அடக்க வேண்டும் என்றார்.
****
1 comments:
மேலும் சில சந்தேகங்கள்.
வாகனமொன்றில் தப்பிச்செல்ல முற்பட்டப் போது சுடப்பட்டிருந்தால், அந்த வாகனத்தைக் காட்டாதது ஏன்?
வாகனத்தில் பிரபாகரன் மட்டும் தான் தப்பிச்செல்ல முயற்சித்தாரா?
அவருடன் சென்றவர்கள் எங்கே?
சுடப்பட்டதாகச் செய்திகள் வெளியிடப்பட்டு இரண்டு நாட்களுக்கு பின்பே படத்தைக் காண்பிக்கின்றனர். படத்தில் உள்ள (போலியென்றாலும்) பிரபாகரனின் தோற்றத்தை துள்ளியமாக காட்டும் போது மரபணுச் சோதனைகளூடாக உறுதிப்படுத்துவதாகக் கூறுவது ஏன்?
இரண்டு நாட்களுக்கு முன் சுடப்பட்டதாக கூறும் இலங்கை ஊடகங்கள், இன்று நீர் ஏரியில் இருந்து சடலத்தை தூக்கியெடுப்பது போன்று காணொளியில் காண்பிக்கின்றனர்.
இரண்டு நாட்கள் நீரில் கிடந்த ஒரு சடலத்தில் குறிப்பாக கண்களை மீன்கள் கொத்திவிடும். ஆனால் இக்காணொளியிலோ கண்கள் திறந்த நிலையில் வெள்ளை நிறத்தில் காணப்படுகின்றது. தவிர நீரில் இரண்டு நாட்கள் கிடந்த சடலத்தில் தோற்றம் ஒரு போதும் இப்படியிருக்கப் போவதில்லை.
ஒருவர் இறந்தப் பின்பும் குறிப்பிட்டக் காலத்திற்கு மயிர் வளர்ந்த வண்ணமே இருக்கும். இங்கே மெழுகுப் பொம்மைப் போல் சடலம் காண்பிக்கப்படுகின்றது.
சடலத்தை துக்கியெடுக்கும் காட்சியைப் பாருங்கள்
அதில் இரண்டு நாட்களுக்கு முன்பு இறந்த ஒரு சடலம் உருக்குழைந்த நிலையிலேயே இருக்கும். அதிலும் தலையில் வெடிப்பட்டு தலையின் பிற்பகுதி அற்ற நிலையிலேயே காண்பிக்கப் படுகின்றது. அதுவும் தண்ணீருக்குள் இரண்டு நாட்கள் கிடந்திருப்பின் அதனை கையால் தொட்டுக்கூடப் பார்க்க முடியாதளவு சிதைந்து சீழ் பிடித்துப் போயிருக்கும். கொழக் கொழ என்று அல்லவா இருக்கும். அவ்வாறான ஒரு சடலத்தை மண்டை சிதைந்திருக்கும் இடத்தில் கைகளை வைத்து எவ்வாறு தூக்க முடியும்?
காணொளியை மீண்டும் ஒரு முறைப் பாருங்கள்.
கருத்துரையிடுக