வருண்காந்தியைக் கைது செய்யவேண்டும்! - திருமா வலியுறுத்தல்



சிறுபான்மையினரையும்
ஜனநாயகத்தையும் கொச்சைப்படுத்திய வருண்காந்தியைக் கைது செய்யவேண்டும்!
தொல். திருமாவளவன் வலியுறுத்தல்

பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளரும் மறைந்த சஞ்சய் காந்தியின் புதல்வருமான வருண்காந்தி அண்மையில் தனது தொகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய பேச்சு சமூக ஒற்றுமை மற்றும் பொது அமைதியை விரும்பும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குறிப்பாக, இஸ்லாமிய சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்தவர்களிடையே மிகுந்த அச்சத்தை உருவாக்கியுள்ளது. பகவத் கீதையை விமர்சிப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைக் கொல்லுவதற்கு ஒவ்வொரு இந்துவுக்கும் உரிமை உண்டு என்று பேசியிருப்பது இந்துத்துவ வெறித்தனத்தில் எறிக்கிடக்கும் சங்கப் பரிவார ஆமைப்புகளின் தலைவர்களே பேச ஆஞ்சுகிற, கூசுகிற கருத்தாகும். இவ்வளவு வெளிப்படையான இந்துமத வெறியைத் தூண்டும் போக்கை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்களேகூட கையாண்டதில்லை. இனால், ஜவகர்லால் நேருவின் குடும்பப் பாரம்பரியத்தைச் சேர்ந்த ஓருவர் இவ்வாறு பேசியிருப்பது ஜவகர்லால் நேருவின் குடும்பத்திற்கே இழுக்குத் தேடுவதாக அமைந்துள்ளது.

வருண்காந்தியின் இந்தப் போக்கை பாரதிய ஜனதா கட்சியும், அவரது தாயார் மேனகா காந்தியும் தட்டிக்கொடுத்து ஏக்கங்கொடுத்த வருகின்றனர். தேர்தல் இணையத்தின் எச்சரிக்கையையும் மீறி அவர் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து திரும்பப் பெறுவதில்லை என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னணித் தலைவர்கள் உறுதியாக அறிவித்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சியின் இத்தகைய பிடிவாதமான அணுகுமுறை சிறுபான்மைச் சமூகத்தைக் கொச்சைப்படுத்துவதாக மட்டுமல்லாமல் ஜனநாயகத்தையே கேவலப்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே இத்தகைய அணுகுமுறையால் நாடெங்கிலும் மதவெறியைத் தூண்டி இதன்மூலம் அரசியல் அறுவடையைச் செய்துகொள்ள பாரதிய ஜனதா கட்சி சூது, சூழ்ச்சி செய்வதாக அறிய முடிகிறது.

அந்த வகையில்தான் ராமர் பாலத்தை புனிதச் சின்னமாக அறிவிப்போம் ஏன்று பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது. இவற்றையெல்லாம் இந்தியத் தேர்தல் இணையமோ, இந்திய அரசோ கண்டுகொள்ளாமல் அமைதி காப்பது மதவெறிச் சக்திகளுக்குத் துணை போவதாக அமையும். பிரச்சார நடவடிக்கைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் விதிகளாக அறிவித்துள்ள தேர்தல் இணையம் மதவெறியைத் தூண்டுகிற வாக்குறுதிகளையும் தடை செய்ய முன்வரவேண்டும். வருண்காந்தி தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்று உடனடியாக அறிவிக்க வேண்டும்.

தமிழகத்தில் ஈழத் தமிழர் சிக்கலை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முயலும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்கள், கச்சத்தீவை சிங்களவர்கள் புனித பூமியாக அறிவித்ததைக் கண்டித்ததைப் போல ராமர் பாலத்தைப் புனிதச் சின்னமாக அறிவிப்போம் என அறிக்கை வெளியிட்டுள்ள பாரதிய ஜனதாவை ஏன் கண்டிக்கவில்லை? ஆ.தி.மு.க., பாரதிய ஜனதா போன்ற அரசியல் கட்சிகள் மதவெறிப் போக்கை உயர்த்திப் பிடிக்கின்றன என்பதை பொதுமக்கள் உணர்ந்துகொள்ள வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்ட விரும்புகிறது. இசுலாமிய, கிறித்தவச் சிறுபான்மையினரும் இதர ஜனநாயக சக்திகளும் மிகவும் விழிப்பாக இருந்து மதவெறிக் கட்சிகளை முறியடிக்க வேண்டும். வருண்காந்தியை தேர்தலில் போட்டியிடத் தகுதியற்றவர் என்பதோடு, அவரைக் கைது செய்து அவர்மீது சட்டப்படியான நடவடிக்கைகளை விரைவு படுத்த வேண்டுமெனவும் விடுதலைச் சிறுத்தைகள் வற்புறுத்துகிறது.
***

0 comments:

கருத்துரையிடுக