"அ.தி.மு.க கூட்டணி வேண்டாம் " - விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வலியுறுத்தல்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அ.தி.மு.க உடன் கூட்டணி சேர்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 20.03.2009 வெள்ளிக்கிழமை சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்மண் பத்திரிக்கை அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டதிற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு உள்பட தலைமை கழக,பொது குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற பொது தேர்தல் குறித்து கலந்துரையாடபட்டது.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க சேரும் பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள் என்ன நிலை மேற்கொள்வது என்று கூட்டத்தில் கலந்தாலோசிக்கபட்டது.அப்போது அ.தி.மு.க கூட்டணியில் சேர்வதற்கு மாவட்ட செயலாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே அ.தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்த பொது ஏற்பட்ட அவமானங்களை சுட்டி காட்டி பேசினார்கள் மேலும் அ.தி.மு.க வெற்றி பெறும்பட்சத்தில்,மத்தியில் மதவாத ப.ஜ.க அரசு ஆட்சி அமைக்கவே அதரவு கொடுக்கும்.எனவே அ.தி.மு.க கூட்டணியில் பங்கேற்க வேண்டாம் என்று பலரும் வற்புறுத்தினார்கள்
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி தொகுதி பங்கீடு ஆகியவற்றை முடிவு செய்வதற்கு கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு முழு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
௧)ஈழ தமிழருக்காக தனது இன்னுயிரை தீக்குளித்து ஈகம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அன்னவள்ளி ஆனந்த்,பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த கீழவள்ளி இராசசேகர் ஆகியோருக்கு இந்த அவை வீரவணக்கத்தை செலுத்துகிறது.அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அழ்ந்த தெரிவித்து கொள்கிறது.
௨)அன்மையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தி.மு.கவுக்கும் இடையில் சாதி ஒழிப்பு,சமத்துவம்,பொதுவுடைமை போன்ற கொள்கை அடிப்படையிலான உறவு உள்ளது எனவும் இவ்உறவு தொடரும் எனவும் அறிவித்திருப்பதை இந்த அவை மனபூர்வமாக வரவேற்று மாண்புமிகு முதல்வருக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறது.
௩)நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏற்ற வகையில் கட்சி இடம்பெறும் கூட்டணியில் ஐந்து தொகுதிகளுக்கும் குறையாமல் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைமையை இந்த அவை கேட்டுகொள்கிறது.
௪)கடந்த சில ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் மற்றும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் மூலம் மிகுந்த இணக்கதோடும் தோழமையோடும் இணைந்து செயல்பட்டு வந்துள்ளன.இந்த நல்லிணக்கமான உறவு தேர்தல் களத்திலும் இவ்விரு கட்சிகளிடையே தொடர வேண்டுமென்பது இரு கட்சிகளை சார்ந்த தொண்டர்கள் மட்டம் வரையிலான எதிர்பார்ப்பாக உள்ளது.எனவே, இவ்விரு கட்சியினரும் ஒரே கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதையே இக்கூட்டம் விரும்புகிறது.
௫)ஈழத்தில் தொடருகின்ற இனபடுகொலையை தடுத்து நிறுத்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இந்த அவை கேட்டுகொள்கிறது.
௬)எதிர்வரும் ஏப்ரல் 14 ஆம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் விடுதலை சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழாவை கடலூரில் நடத்துவதென இந்த அவை தீர்மானிக்கிறது.
இத்தகைய ஆறு தீர்மானங்கள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களால் முன்மொழியபட்டு செயற்குழு தலைவர்களால் வழிமொழியபட்டது...
நன்றி - படங்கள் : தினத்தந்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 20.03.2009 வெள்ளிக்கிழமை சென்னை வேளச்சேரியில் உள்ள தமிழ்மண் பத்திரிக்கை அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டதிற்கு கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கினார்.தலைமை நிலைய செயலாளர் வன்னியரசு உள்பட தலைமை கழக,பொது குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற பொது தேர்தல் குறித்து கலந்துரையாடபட்டது.
அ.தி.மு.க கூட்டணியில் பா.ம.க சேரும் பட்சத்தில் விடுதலை சிறுத்தைகள் என்ன நிலை மேற்கொள்வது என்று கூட்டத்தில் கலந்தாலோசிக்கபட்டது.அப்போது அ.தி.மு.க கூட்டணியில் சேர்வதற்கு மாவட்ட செயலாளர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஏற்கனவே அ.தி.மு.க கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இருந்த பொது ஏற்பட்ட அவமானங்களை சுட்டி காட்டி பேசினார்கள் மேலும் அ.தி.மு.க வெற்றி பெறும்பட்சத்தில்,மத்தியில் மதவாத ப.ஜ.க அரசு ஆட்சி அமைக்கவே அதரவு கொடுக்கும்.எனவே அ.தி.மு.க கூட்டணியில் பங்கேற்க வேண்டாம் என்று பலரும் வற்புறுத்தினார்கள்
மேலும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கூட்டணி தொகுதி பங்கீடு ஆகியவற்றை முடிவு செய்வதற்கு கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு முழு அதிகாரம் கொடுத்து தீர்மானம் நிறைவேற்றபட்டது.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
௧)ஈழ தமிழருக்காக தனது இன்னுயிரை தீக்குளித்து ஈகம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அன்னவள்ளி ஆனந்த்,பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த கீழவள்ளி இராசசேகர் ஆகியோருக்கு இந்த அவை வீரவணக்கத்தை செலுத்துகிறது.அவர்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு அழ்ந்த தெரிவித்து கொள்கிறது.
௨)அன்மையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கும் தி.மு.கவுக்கும் இடையில் சாதி ஒழிப்பு,சமத்துவம்,பொதுவுடைமை போன்ற கொள்கை அடிப்படையிலான உறவு உள்ளது எனவும் இவ்உறவு தொடரும் எனவும் அறிவித்திருப்பதை இந்த அவை மனபூர்வமாக வரவேற்று மாண்புமிகு முதல்வருக்கு நன்றியையும் தெரிவித்து கொள்கிறது.
௩)நடைபெற உள்ள நாடாளுமன்ற பொது தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவதற்கு ஏற்ற வகையில் கட்சி இடம்பெறும் கூட்டணியில் ஐந்து தொகுதிகளுக்கும் குறையாமல் தேர்தல் உடன்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று கட்சியின் தலைமையை இந்த அவை கேட்டுகொள்கிறது.
௪)கடந்த சில ஆண்டுகளாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் பாட்டாளி மக்கள் கட்சியும் தமிழ் பாதுகாப்பு இயக்கம் மற்றும் இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஆகிய அமைப்புகளின் மூலம் மிகுந்த இணக்கதோடும் தோழமையோடும் இணைந்து செயல்பட்டு வந்துள்ளன.இந்த நல்லிணக்கமான உறவு தேர்தல் களத்திலும் இவ்விரு கட்சிகளிடையே தொடர வேண்டுமென்பது இரு கட்சிகளை சார்ந்த தொண்டர்கள் மட்டம் வரையிலான எதிர்பார்ப்பாக உள்ளது.எனவே, இவ்விரு கட்சியினரும் ஒரே கூட்டணியில் இடம்பெற வேண்டும் என்பதையே இக்கூட்டம் விரும்புகிறது.
௫)ஈழத்தில் தொடருகின்ற இனபடுகொலையை தடுத்து நிறுத்த இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருமதி சோனியா காந்தி அவர்கள் தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் இந்த அவை கேட்டுகொள்கிறது.
௬)எதிர்வரும் ஏப்ரல் 14 ஆம் நாள் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளில் விடுதலை சிறுத்தைகளின் விருதுகள் வழங்கும் விழாவை கடலூரில் நடத்துவதென இந்த அவை தீர்மானிக்கிறது.
இத்தகைய ஆறு தீர்மானங்கள் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களால் முன்மொழியபட்டு செயற்குழு தலைவர்களால் வழிமொழியபட்டது...
3 comments:
ஜெயலிதா போன்ற தமிழின துரோகி யாருமில்லை .....அவர் தன்னை ஒரு பாப்பாத்தி என்று பகிரங்கமாக அறிவித்தவர் அவரோடு கூட்டு சேர்வது என்பது மிகவும் கேவலமான ஒன்று
அ.தி.மு,க வை ஆரம்பித்த M.G.R தான் அன்று ஈழம் வேண்டும் என்று சொன்னார்.ஆனால் ஜெயலலிதா போர் என்றால் மக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று ராஜபகேவின் குரலாக ஒலிக்கிறார்
ஈழ்ம் வென்றெடுக்க ,தேர்தலில் கூட்டணி சேரும் கட்சிகள் விடுதலை சிறுத்தைகளுடன் சேர்ந்து ஒத்துழைக்குமா ........................?
கருத்துரையிடுக