
நேற்று ( 20-03 -09) நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் கூட்டத்திற்குபின் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவான் ,செய்தியாளர்களின் கேள்விகளுக்கு தெளிவாக பதிலளித்தார் அந்த கேள்வி பதில்கள் உங்கள் பார்வைக்காக இங்கே
கேள்வி : பா.மா.க நிறுவனர் டாக்டர் .ராமதாஸ் ஆ.தி.மு.க கூட்டணியில் சேர உங்களுடன் தொலைபேசியில் பேசியதாகவும் அதற்கு நீங்கள் மறுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதே ?
பதில் :-
டாக்டர் .
ராமதாஸ் தொலைபேசியில் என்னை தொடர்பு கொள்ளவில்லை 19-
ஆம் தேதி மாலை 6
மணிக்கு தியாகராயநகரில் உள்ள பொங்குதமிழ் அரகட்டலைக்கு சென்று பார்த்து உண்மை தான் இன்றைய தமிழக அரசியல் நிலை,
எதிர்காலத்தில் இரு கட்சிகளின் ஒற்றுமை குறித்து வெகு நேரம் பேசினோம்.
"இணைந்தவர்களை எவராலும் பிரிக்க முடியாது" என்று சொன்ன அந்த வார்த்தையை காப்பாற்ற இணைந்தே இருப்போம் , சேர்ந்தே முடிவு செய்வோம் என்று டாக்டர் . ராமதாஸ் கூறினார் . 20-ஆம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது இதை பற்றி கலந்தாய்வு செய்து எங்களின் முடிவை சொல்லவதாக நான் சொன்னேன்.
கேள்வி :- கூட்டணி தொடர்பாக ஆ.தி.மு.கவில் இருந்து அழைப்பு வந்ததா ?
பதில் : -
அப்படி அழைப்பு எதுவும் இதுவரை வரவில்லை.
கேள்வி :- பா.மா.கவும் நீங்களும் ஒரே நிலையில் இருந்து தேர்தலை சந்திக்க போகிறீர்களா?
பதில் :-
செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
இதில் மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுடைய கருத்துக்களை கேட்டு முடிவெடுப்பேன்.
கேள்வி :- ஒருவேளை பா. மா.க ,ஆ.தி.மூ.க கூட்டனிக்கு சென்றால் நீங்கள் தி.மு.க கூட்டணியில் நீடிப்பீர்களா ?
பதில் :-
யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது.
௨௨-
தேதி பா.
மா.
க பொதுகுழு கூட்டி கூட்டணி பற்றிய முடிவை டாக்டர் .
ராமதச்ஸ் அறிவிக்கிறார் .
அதன் பிறகு தான் நாங்கள் முடிவு செய்வோம்.
காங்கிரசார் எதிர்ப்பது ?
கேள்வி:- கூட்டணியில் இருந்து விடுதலை சிறுத்தைகளை வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறியிருப்பது பற்றி ?
பதில் :-
விடுதலை சிறுத்தைகள் கூட்டணியில் இருப்பதாக முதலமைச்சர் கருணாநிதி சொல்லியிருக்கிறார் .
கூட்டணியில் இருந்து எங்களை வெளியேற்ற வேண்டும் என்று காங்கிரசில் சில தலைவர்கள் சொல்லியிருப்பது எங்களை குறிக்கவில்லை.
தி.
மு.
க வையும் முதலமைச்சரையும் தான் குறிக்கும்.
எத்தனை தொகுதி ?
கேள்வி :- எத்தனை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் ?
பதில் :-
விடுதலை சிறுத்தைகளுக்கு தமிழ் நாட்டை பொறுத்தவரை கணிசமான வாக்கு வங்கி உள்ளது .
எங்கள் வலிமையை வைத்து ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்போம்.
கேள்வி: - சிதம்பரம் தொகுதியில் நீங்கள் போட்டி இடுகின்றீர்களா ?
பதில் :-
சிதம்பரத்தில் நான் போட்டியிட வேண்டும் என்று கட்சியின் உயர்மட்ட குழு முடிவு செய்துள்ளது 1999,
2004 -
ம் ஆண்டுகளில் நடந்த தேர்தலில் அந்த தொகுதியில் போட்டியிட்டு 2 1/2
லட்சம் வாக்குகள் பெற்றிருக்கிறேன்.
மக்கள் என்னை வெற்றி பெற செய்வார்கள்.
அணி மாற்றம் ஏற்படுமா ?
கேள்வி :- காங்கிரஸ் கூட்டணியில் நீங்கள் இடம்பெற்று ,வெற்றி பெற்றால்,தேர்தலுக்கு பிறகு அணி மாறுவீர்களா ?
பதில் :-
தேர்தலுக்கு முன்னர் ஒரு கூட்டணி ,
தேர்தலுக்கு பின்னர் ஒரு கூட்டணி என்பது இன்றைய அரசியல் நிலை.
காங்கிரசுக்கு எதிராக ஆ.
தி.
மு.
க கூட்டனிக்கு அளிக்கப்படும் வாக்குகள் கூட காங்கிரசுக்கு பயன்படும் நிலை உருவாகலாம்.
தேர்தலுக்கு பிறகு கட்சிகள் அணி மாறும் வாய்புள்ளது.
காங்கிரஸ் அல்லாத கூட்டனிக்கு அளிக்கும் வாக்குகள் அதற்கு எதிராக தான் இருக்கிறது என்று சொல்ல முடியாது.
விடுதலை சிறுத்தைகளுக்கு அளிக்கும் வாக்குகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக,
உழைக்கும் மக்களுக்கு அதரவாக அமையும் என்று உறுதியளிக்கிறேன்.
நம்பிக்கை உள்ளது
கேள்வி :- தேர்தல் பிரச்சாரத்தில் இலங்கை பிரச்சனை இடம்பெறுமா ?
பதில் :-
ஈழ பிரச்சனை தேர்தலில் முதன்மையாக அமையும்.
உண்மையாக யார் போராடுகின்றார்களோ,
அவர்களை மக்கள் கைவிடமாட்டார்கள்,
விடுதலை சிறுத்தைகளை மக்கள் அங்கீகரிபார்கள் என்று நம்பிக்கை உள்ளது ..
1 comments:
Dear Thol Thiruma:
We world Tamils truly believe You & VCK; we will sincerely work for your party in the comming MP election; no support for Your alliance with DMK !! DMK Karunanidhi is a Triator !! wolrd Tamils will never forgive & forget MK Karunanidhi for his cheating the Tamils Race!!!
Your(VCK)valuable peoples' political support is very powerful !! Please don't sacrifice this to the Traitors like DMK etc..
கருத்துரையிடுக