அதிமுக கூட்டணியில் சேர அழைப்பு வரவில்லை-ராமதாசும் என்னை அழைக்கவில்லை: திருமா பேட்டி


விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவரிடம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அதிமுக கூட்டணியில் சேர உங்களுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அதற்கு நீங்கள் மறுப்பு தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளதே? என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு,
’டாக்டர் ராமதாஸ் தொலைபேசியில் என்னை தொடர்பு கொள்ளவில்லை.
19-ந் தேதி மாலை 6 மணிக்கு தியாகராயநகரில் உள்ள பொங்குதமிழ் அறக்கட்டளைக்கு சென்று நான் அவரை சந்தித்து பேசியது உண்மைதான்.
இன்றைய தமிழக அரசியல் நிலை, எதிர்காலத்தில் இருகட்சிகளின் ஒற்றுமை ஆகியவை குறித்து வெகு நேரம் பேசினோம்’’ என்ற அவரிடம், கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க.வில் இருந்து அழைப்பு வந்ததா? என்று கேட்தற்கு, ’அப்படி அழைப்பு எதுவும் இதுவரை வரவில்லை’ என்றார்.
ஒருவேளை, பாமக அ.தி.மு.க. கூட்டணிக்கு சென்றால், நீங்கள் தி.மு.க. கூட்டணியில் நீடிப்பீர்களா? என்று கேட்டதற்கு,
’’யூகங்களுக்கு பதில் சொல்ல முடியாது. 22-ந் தேதி பா.ம.க. பொதுக்குழு கூட்டி கூட்டணி பற்றிய முடிவை டாக்டர் ராமதாஸ் அறிவிக்கிறார். அதன் பிறகுதான் நாங்கள் முடிவு செய்வோம்’’ என்று தெரிவித்தார்.

நன்றி : நக்கீரன்.காம்

2 comments:

ஏன் இன்னும் தனித்து தேர்தலில் போட்டி போட விடுதலை சிறுத்தைகளுக்கு துணிவு வரவில்லை என்பது மட்டும் இன்னும் எங்களுக்கு தெரியவில்லை . நாங்கள் கொடி பிடிக்க தயார் அது போல் நீங்களும், தனித்து போட்டிபோட்டு வெற்றி பெற்று தமிழ்ர்களின் வாழ்கை தரத்தை மாற்றதயாரா ................

22 மார்ச், 2009 அன்று 12:04 PM comment-delete

மக்கள் தான் இதற்கு காரணம் ....விடுதலை சிறுத்தைகள் எத்தனையோ முறை தனித்து போட்டிட்டு தேர்தலை சந்தித்தவர்கள் தான்...மக்கள் பிரச்சனையை கையில் எடுத்து எத்தனையோ இழப்புகளை சந்தித்த அரசியல் வழி வேண்டாம் என்று இயங்கிய எல்லா அமைப்பு அப்படி இயங்கும்பட்சதில் முடகத்தான் பாண்டியனை கொலைசெய்தது அரசு எந்திரம் எவர்கள் தேர்தலை வெறுபவர்கள் இவர்களுக்கு கேட்க நாதி இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தை தடைசெய்யும் முயற்சிகளும் நடந்தது..அண்ணல் சொல்லியதை போன்று "Catch the Parliment we can get our rights only through Catching the parliment" என்று சொன்னார் அம்பேத்கர் சிலைகள் இன்றும் கைநீட்டி காட்டுவது இதைதான் .. இதன் பொருளில் 1999 -ஆம் ஆண்டு நடந்த தேர்தலை அரசியல் சக்தியாக ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டும் பொருட்டு இனியும் நாங்கள் ஆடுகள் அல்ல இல்லிச்சவாய கூட்டமும் அல்ல சீறிபாயும் சிறுத்தைகள் நாங்கள் என்று வீறுகொண்டு விடுதலை சிறுத்தைகளை எழுச்சி பெற்று இன்று ஒடுக்கப்பட்ட மக்கள் ஓரணியில் பெரும் சக்தியாக உருவாகிவரும் தருணம் இருக்கின்றது ...வெறும் போஸ்டர் ஒட்டவும் தோரணம் கட்டவும். மட்டுமே பயன்படுத்த பட்ட மக்கள் இன்று சிறுத்தைகள் என்று பெருமையோடு தலைவர்களை எழுச்சி பெற்று வரும் காலம் ..... கட்சி ஆரம்பித்து பத்து ஆண்டுகள் ஆகியும் இது வரை பெரும்பாலான தேர்தல்களில் தனித்து போட்டிட்டு மக்கள் ஆதரவோடு கணிசமான வாக்குகளை பெற்றாலும் வெற்றி பெற முடியாத சூழ்நிலை,8% வாக்குகள் பெற்றாலும் வெற்றி பெற முடியாத நிலை என்பதை கடந்த கால தோல்விகள் சொல்லுகின்றன ..கடந்த தேர்தலில் மட்டும் தனித்து போட்டியட அட்டைக்கத்தி வீரர் என்று கூட்டணி சேர வேண்டும் என்ற நிர்பந்தத்துக்கு தலைப்பட்டு இருக்கிறார் ....இன்றைய மக்களின் நிலை தான் இதற்கு காரணம் கூட்டணி அமைக்காமல் வெற்றி பெற முடியாது என்பதை அட்டை கத்தி வீரர் உணர்ந்து விட்டார் இடை தேர்தல் முடிவுகளே அதை அவருக்கு காட்டி கொடுத்துவிட்டன. இந்த நிர்பதர்த்திற்கு தான் விடுதலை சிறுத்தைகள் தள்ளபட்டுள்ளனர்...10 ஆண்டுகளில் வந்த எத்தனையோ தேர்தலில் தனித்து போட்டி இட்டாலும் இன்றைய அரசியல் சூழ்நிலையில் இந்த தேர்தலை விட்டுவிட்டால் கட்சி உடையும் நிலை ஏற்படும் ....இப்படி நாங்க ஆதரிக்கிறோம் என்று மக்கள் சொல்லை ஏற்று தான் இதனை தேர்தல்களை தனித்து சந்தித்தார்கள் மக்கள் சொன்னதை போல ஆதரித்தார்கள் ஆனால் பெரும்பான்மை தானே வெற்றி பெறுகிறது நீங்கள் சொன்னதை போல தனித்து நின்றால் உங்க ஓட்டும் கிடைக்கும் மக்களின் ஓட்டும் கிடைக்கும் ஆனால் வெற்றி தான் கிடைகாது வெற்றியை இழக்கும் பட்சத்தில் நாம் நமது கொள்கைகளை வெறும் கிணற்று தவளையாய் தான் உரைக்க முடியும் ..அதைவிடுத்து கூட்டணி அமைத்து வெற்றி பெரும் நிலையில் நாடாளுமன்றத்தில் நுழையும் சிறுத்தைகள் ....ஒரு அதிர்வை உண்டு பண்ணுவார்கள் என்பதில் சந்தேகமில்லை .....

jay
22 மார்ச், 2009 அன்று 1:11 PM comment-delete

கருத்துரையிடுக