முல்லைத்தீவு போக விரும்புகிறவர்களுக்கு வழி காட்ட தயாராக இருக்கிறேன் - திருமா

25 ஆண்டுகளாக இலங்கையில் போர் தொடர இந்திய அரசு தான் காரணம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

இலங்கை தமிழர்களுக்காக கடலூரில் தீக்குளித்து பலியான ஜோதியின் உடல் கடலூர் அரசு ஊழியர் ஐக்கிய பேரவை அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ளது. அவரது உடலுக்கு திருமாவளவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இதனை தொடர்ந்து திருமாவளவன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய திருமாவளவன்,

ஈழத்தமிழர்களுக்காக இதுவரை ஏறத்தாழ 8 பேர் இன்னுயிரை ஈந்துள்ளார்கள். நாம் ஆயுதம் ஏந்தி போராட தயாராக வேண்டுமே தவிர தீவைத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சிக்கக்கூடாது என்று கடலூர் வீதியில் நின்று உங்களை கெஞ்சி இறைஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

நானும் கூட சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்தி இருக்காவிட்டால், தமிழ் வேந்தன், முத்துக்குமரன் போல் ஒரு முடிவுக்கு தள்ளப்பட்டு இருப்பேன்.

நமது கோரிக்கைகளை இந்திய அரசு கேட்காது என்று தெரியும். ஆனாலும் திருமாவளவன் உயிர்விட்ட பிறகாவது இந்திய அரசு முடிவு எடுக்கட்டும் என்று தான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பது என்று முடிவு எடுத்தேன். ஆனால் அது கருணாநிதியும், திருமாவளவனும் சேர்ந்து நடத்துகிற நாடகம் என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா சொன்னார்.

போரில் அப்பாவி மக்கள் சாகத்தான் செய்வார்கள், பிரபாகரன் ஆயுதத்தை கீழே போட்டு சரண் அடைய வேண்டும் என்று ஜெயலலிதா சொல்கிறார். காங்கிரஸ்காரன் கூட அரசியலுக்காக தி.மு.க.வோடு கைகோர்த்து, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறான். 

போரில் அப்பாவி மக்கள் சாகத்தான் செய்வார்கள், பிரபாகரன் ஆயுதத்தை கீழே போட்டு சரண் அடைய வேண்டும் என்று ஜெயலலிதா சொல்கிறார். காங்கிரஸ்காரன் கூட அரசியலுக்காக தி.மு.க.வோடு கைகோர்த்து, இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று சொல்கிறான்.

சுப்பிரமணிய சாமியை தாக்கியதற்கு திருமாவளவன் தான் ஆள் அனுப்பினார். எனவே திருமாவளவனை கைது செய்ய வேண்டும் என்று சோ சொல்கிறார். நாங்கள் எதற்கும் தயாராக இருக்கிறோம். மேடையில் இருந்து இறங்கி வீட்டுக்கு போகவும் தயார், சிறைக்கு போகவும் தயாராக இருக்கிறோம். நீங்கள் (தி.மு.க.) ஒத்துழைத்தால் உங்கள் வழியில் சேர்ந்து வருவோம். ஒத்துழைக்கா விட்டால் எங்கள் வழியில் பயணம் ஆவோம்.

இலங்கை பிரச்சினை 25 ஆண்டுகாலமாக தொடர்ந்து கொண்டு இருப்பதற்கு இந்திய அரசு தான் காரணம். ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டதால் இலங்கை தமிழர்கள் அழிவதை இந்தியா தடுக்கவில்லை என்கிறார்கள். உண்மை அதுவல்ல. ராஜீவ்காந்தி கொலை செய்யப்படுவதற்கு முன்பும் இந்தியாவின் நோக்கம் அதுவாகத்தான் இருந்தது. தெற்காசியாவில் இந்தியா வல்லரசாக விளங்க விரும்புவதே இதற்கு காரணம்.

இன்றைக்கு ஆளுங்கட்சி கூட்டணியில் நாம் இருந்தாலும் கூட விடுதலை சிறுத்தைகள் 16 பேர் குண்டர் சட்டத்தில்அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். 300 பேர் இன்னும் சிறையில் இருந்து வெளியே வரமுடியவில்லை. ஒருவேளை விடுதலை சிறுத்தைகளையும் பிரித்து விட்டால் தி.மு.க.வை தனிமைப்படுத்திவிடலாம் என காவல்துறை நினைக்கிறதோ என தெரியவில்லை.

திருமாவளவனின் போராட்டம் சரியில்லை என்றால் முல்லைத்தீவு போக விரும்புகிறவர்களுக்கு வழி காட்ட தயாராக இருக்கிறேன். காவல்துறை கெடுபிடி செய்தாலும் புலிகள் விரும்பினால் நாம் முல்லைத்தீவுக்கு போக முடியும். ஆகவே நீங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்றார். 

0 comments:

கருத்துரையிடுக