நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்தனர்சென்னை நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று(09.09.2016) மாலை 4 மணி அளவில்  தலைவர் தொல். திருமாவளவன் முன்னிலையில் தங்களை விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இணைந்தனர்.

செஞ்சுடர்,  ஜெகன், அஸ்வின், மூர்த்தி,  பிரகாஷ், விக்கி. ஆகியோர் மாணவர்களை ஒருங்கிணைப்பு செய்யும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.


தலைவரிடம் மாணவர்கள் வைத்த கோரிக்கைகள்:

1) பஸ் பாஸ் வழங்கிட
2) அடிப்படை வசதிகள் இல்லை
3) நூலகம் வசதி இல்லை
4) கல்வி உதவித்தொகை நிதி வழங்க வேண்டும்
5) குடிநீர் வசதி வழங்க வேண்டும்
6) கழிப்பறை ஒழுங்க பராமரிப்பு தேவை.

ஏழை எளியோர் மாணவர்கள் அதிகம் படிக்கும் இக்கல்லூரியில் அனைத்து வசதிகள் வழங்க வேண்டும் என்று தலைவர் தொல். திருமாவளவன் கல்லூரி நிர்வாகதிடம் கோரிக்கை வைத்தனர்.


இந்நிகழ்வை வெ.அம்பேத்தேவன், வெ.கோட்டி, து.அப்புன் ஆகியோர் முயற்சியில் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்சியில் முற்போக்கு மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


செய்தி & புகைப்படம் : கலாநிதி

0 comments:

கருத்துரையிடுக