தலைவர் பிறந்த நாள் நிகழ்ச்சிகள்

ஆகஸ்டு 17 - தலைவர் தொல்.திருமாவளவன்
பிறந்த நாள் நிகழ்ச்சிகள்


விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளை ஆகஸ்டு 17 அன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் மிகச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறோம்.  அந்நாளில் வெகுமக்களின் கோரிக்கைகளை உள்ளடக்கியும் சமூக நலனை முன்னிறுத்தியும் ஒவ்வோர் ஆண்டும் மையப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.  அதேபோல இவ்வாண்டும் அவரது 54வது பிறந்த நாளை முன்னிட்டு மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை நடத்தவிருக்கிறோம்.  

தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் பிறந்த நாளில் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவரம் வருமாறு:

 • அன்று காலை 8.30 மணியளவில் புரட்சியாளர் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கிறார்.  
 • அதனைத் தொடர்ந்து 8.40 மணிக்கு சென்னை சாந்தோமில் உள்ள காதுகேளாதோர் பள்ளியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு வழங்குகிறார்.  
 • 10 மணியளவில் வெளிச்சம் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.  
 • அதனையடுத்து 11 மணிக்கு கோயம்பேடு பேருந்து நிலையம் எதிரில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு 12 மணியளவில் கோயம்பேடு காய், கனி சந்தையில் உள்ள தொழிலாளர்களுக்கு மதிய உணவு வழங்குவதுடன் பல்வேறு நலத் திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.  
 • அதன் பிறகு நண்பகல் 1 மணியளவில் அசோகர் நகர் அம்பேத்கர் திடலில் கட்சித் தொண்டர்களின் வாழ்த்துக்களைப் பெறுகிறார்.  
 • பிற்பகல் 3 மணியளவில் இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் மதச்சார்பின்மை பாதுகாப்பு மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறார்.  மாநாடு பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குவதுடன் மக்கள் நலக் கூட்டணியின் உறுப்புக்கட்சிகளான மதிமுகவின் பொதுச் செயலாளர் திருமிகு வைகோ, இந்திய பொதுவுடைமைக் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
இவண்
  கு.கா.பாவலன்

  0 comments:

  கருத்துரையிடுக