சி.பா. இராமச்சந்திர ஆதித்தனார் மறைவு - தொல்.திருமாவளவன் இரங்கல்
சி.பா. இராமச்சந்திர ஆதித்தனார் மறைவு -
தமிழர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்
தமிழர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்
தொல்.திருமாவளவன் இரங்கல்
தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் மூத்த மகனும் மாலை முரசு நாளிதழின் அதிபருமான திரு. பா.இராமச்சந்திர ஆதித்தனார் அவர்கள் காலமான செய்தி பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. தந்தையார் சி.பா. ஆதித்தனார் போலவே தமிழர் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். தமிழீழத் தந்தை செல்வா அவர்களின் அறப்போராட்டத்தையும், மேதகு பிரபாகரன் அவர்களின் ஆயுதப் போராட்டத்தையும் தொடர்ந்து ஆதரித்து வந்ததோடு, அந்தக் கருத்தியலைப் பரப்பும் பணியில் மாலை முரசு நாளிதழை ஈடுபடுத்தினார். தமிழர் உரிமை மட்டுமல்லாது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர். ஒடுக்கப்பட்ட மக்களின் கருத்துக்களுக்கு தமது மாலை முரசு நாளிதழில் தொடர்ச்சியாக இடமளித்து வந்தவர். எவ்வித அடக்குமுறைக்கும் நெருக்கடிக்கும் அடிபணியாது, சமரசமில்லாமல் கொண்ட கொள்கையில் பயணம் செய்துவந்த மகத்தான மனிதர் சி.பா.இராமச்சந்திர ஆதித்தனாருடைய மறைவு தமிழ்ச் சமுதாயத்திற்கும் பத்திரிகை உலகத்திற்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கும் மாலை முரசு குழுமத்திற்கும்
எமது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு
சி.பா. இராமச்சந்திர ஆதித்தனார் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் வீரவணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இவண்
தொல்.திருமாவளவன்