இளவரசன் சாவில் ஐயம் - தமிழக அரசு குற்றப் புலனாய்வுக்கு ஆணையிடக்கோரி தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

தருமபுரி இளவரசன் சாவினைத் தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தில் 144 தடையாணையை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. இதனால் இளவரசன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவோ, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லவோ இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ரிட்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 144 தடையாணையை முற்றிலும் விலக்கிக்கொள்ள வேண்டுமெனவும் இளவரசனின் உடலடக்க இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அனுமதிக்க வேண்டுமெனவும் கோரியிருக்கிறோம். அத்துடன் இளவரசன் சாவு தொடர்பான குற்றப் புலனாய்வு விசாணையை காவல்துறையினர் மட்டுமே மேற்கொள்வார்களேயானால் உண்மை வெளிச்சத்திற்கு வராது என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, தடய அறிவியல் வல்லுனர் பேராசிரியர் சந்திரசேகரன் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு ஒன்றை அமைக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மேலும் ஒரு ரிட்மனுவைத் தாக்கல் செய்து இந்த மனு மீதான விசாரணையை இன்று (11.07.2013) நீதியரசர்கள் திரு.தனபாலன், திரு.சி.டி.செல்வம் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது. 

அத்துடன், விடுதலைச் சிறுத்தைகளின் வேண்டுகோளை ஏற்கும் வகையில் தமிழக அரசு நீதிவிசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. ஏற்கனவே, சென்னையில் இன்று (11.07.2013) நீதி விசாரணைக்கோரி நடைபெறுவதாக இருந்த ஆர்ப்பாட்டம் வரும் 17.07.2013 அன்று சென்னையில் நடத்துவதெனத் தள்ளி வைக்கப்படுகிறது. இளவரசன் சாவு உள்ளிட்ட சாதிய வன்கொடுமைகளைக் கண்டித்தும் சாதியின் பெயரால் நடைபெறும் கௌவரக் கொலைகளைத் தடுக்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் எனது (தொல்.திருமாவளவன்) தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. 

இந்நிலையில் தமிழக முதல்வர் அவர்களுக்கு விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் ஒரு வேண்டுகோளை விடுக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். அதாவது இளவரசன் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய பெற்றோர் கூறியுள்ளனர். அவர் பிணத்தருகே கையுறை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் இளவரசன் இரயிலில் அடிபட்டு இறந்ததாக இரயில்வே துறையினரிடமிருந்து எந்த ஆதாரம் அளிக்கப்படவில்லை.  இந்நிலையில் இந்த வழக்கை தடய அறிவியல் துறையில் ஆற்றல் வாய்ந்த வல்லுநரைக்கொண்டு புலனாய்வு செய்வதே தற்போதைய தேவையாக உள்ளது. ஆகவே, மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தடயஅறிவியல் வல்லுனர் பேராசிரியர் சந்திரசேகரன் தலைமையில் குற்றப் புலனாய்வு நடத்த ஆணையிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவண்
தொல்.திருமாவளவன்

1 comments:

இந்த உலகத்தில் பிறந்த நாங்கள், அதாவது என் முன்னோர்கள் என்ன இவர்களை அடிமை படுதினர்களா?? ஏன் நாங்கள் எல்லாம் ஆண்டு ஆண்டு காலமாக அடிமை பட்டு இருக்க வேண்டுமா?? ஏன் அடிமை பட்டு இருந்தவனுக்கு அடக்கு முறை என்பது புதிது அல்ல !!!!! ஒட்டுமொத்த இந்த சமுதயத்துக்கு சுதந்தரம் காற்றை சுவாசிக்க வைத்தவர் தான் அண்ணல் அம்பேத்கர் ..தமிழகத்தலும் .இந்தியாவிலும் .சரி பாதி சாதிவெறியர்கள் , சரி பாதி மத வெறியர்கள் ஆக இந்த சமுதாயத்தில் பிறந்த எங்களால் என்ன செய்ய முடியும் ...மிண்டும் புரட்சி வெடிக்கும் .......காலம் வந்து விட்டது .அதற்கான செயல் திட்டங்கள் திட்டப்படும் ...எவன் எல்லாம் தலித் மக்களுக்கு எதிராக செயல் படுகிறானோ ???? அவன் எல்லாம் எங்கள் எதிர்கள் தான் ...............தமிழ் ஈழத்தில் எவ்வாறு புரட்சி வெடித்து ஒரு இயக்கம் உருவானதோ??? அதை போல சிங்களவனுக்கு எதிராக எம் தலைவர் ,தமிழுக்கு எல்லாம் பெருமை சேர்க்க கூடிய வகையில் செயல் பட்ட தேசிய தலைவர் பிரபாகரன் நேர்த்தியான வகையில் இந்த போராட்டம் ,புரட்சி தொடங்கும் ..."""இங்க உள்ள அரசியல் வாதிகள் எல்லாம் திருமாவளவனை தவிர எல்லாம் சந்தர்ப்ப வாதிகள்"""...ஏன் என்றால் வட இந்தயாவில் நடந்த இயற்கை சீற்றம் தன் தொகுதி நிதியை கொடுப்பார்கள் ...தருமபுரியில், நடந்த சுமார் 300 வீடுகளை இழந்து ,உடமைகளை இழந்த மக்களுக்கு எந்த பணத்தை குடுத்தார்கள் .....இவர்களுக்கு இந்தியாதான் முக்கியம் .அதாவது பதவி தான் முக்கியம் .இந்த சம்பவங்களுக்கு பின் இந்த தலித் சமுதயம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் ,..உங்களுக்கு .உங்களுடய சந்ததிகளுக்கு பாதுகாப்பு குறித்து தலித்களுக்கு யார் சிறந்த தலைவர் என்பதை உறுதியாக ஏற்று கொன்று போராட தகுதியான தலைவர் நம் தலைவர் திருமாவளவன் வழியில் பின் தொடர வேண்டும்............தருமபுரியில் இளவரசனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு விடுதலை சிறுத்தைகளின் வீர வணக்கம்!! ...................நெல்லை திருமா ரவி ,,,,

13 ஜூலை, 2013 அன்று AM 11:31 comment-delete

கருத்துரையிடுக