தலைவர் திருமா அவர்கள் விழுப்புரம் மாவட்டதில் நுழைவதற்கு மாவட்ட ஆட்சியர் நுழைய கடந்த மே மாதம் 16 ஆம் நாள் தடைவிதித்தார், அதை எதிர்த்து தலைவர் திருமா அவர்கள் விடுமுறைக் கால உயர்நீதி மன்ற அமர்வில் வழக்கினை தாக்கல் செய்தார். கடந்த இரண்டு வாரங்கள் மூன்று அமர்வுகளில் விசாரணை நடைபெற்று இன்று இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் நுழைவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்ட போதும் நீதித் துறையின் களத்தில் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.
வழக்கில் மூத்த வழக்கறிஞர் சங்கரசுப்பு வாதாடினார், வழக்கறிஞர்கள் பாலகிருஷ்ணன், கௌதம சன்னா, முனுசாமி மற்றும் ரமேஷ் உதவியாய் செயல்பட்டனர், உதவிய மற்றத் தோழர்களுக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்
கௌதம சன்னா
மாநில கருத்தியல் பரப்புச் செயலாளர்
0 comments:
கருத்துரையிடுக