ரயில் மறியல்: விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது

தமிழ் ஈழம் அமைக்க பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மற்றும் சுற்றுவட்டாரங்களில் நடத்திய ரயில் மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பறக்கும் ரயில் மார்க்கத்தில் திருவான்மியூர் ரயில் நிலையத்தில் நேற்று காலை 10.30 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் கடற்கரையில் இருந்து வேளச்சேரி சென்ற மின்சார ரயில் 30 நிமிடங்கள் நிறுத்தப்பட்டன. அங்கு சென்ற போலீசார் ரயில் மறியல் செய்த விடுதலை சிறுத்தைகள் மாநில து.கொ.ப.செ எஸ்.எஸ்.பாலாஜி, சென்னை மாவட்ட செயலாளர் இளஞ்செழியன் உட்பட நூற்றுக்கும் மோலான சிறுத்தைகளை கைது செய்தனர்.





0 comments:

கருத்துரையிடுக