மதுரையில் டெசோ குழுவினர் சாலை மறியல்
தமிழர்களை கொன்றொழித்த இராஜபக்சேவை போர்க்குற்றவாளியா க அறிவிக்கக் கோரியும், இலங்கையில் தமிழர்களுக்கு தனித் தமிழீழம் பெற்றுத்தர வேண்டும் எனவும், அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக வலுவான தீர்மானமாக திருத்தம் செய்து , இதை இந்திய அரசே முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என வலியுறுத்தி மதுரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 12-03-2013. அன்று மதுரையில் காலை 10.30 மணியளவில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரேயுள்ள அண்ணா பேருந்து நிலையம் சிவகங்கை சாலையில் சாலை மறியல் நடைபெற்றது.
சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைதாகி மாலை விடுவிக்கப்பட்டனர். இபோராட்டதி ல் தலைமை நிலைய செயலாளர் ஏ.சி.பாவரசு துணைப் பொது செயலாளர். வெ.கனியமுதன், முற்போக்கு மாணவர் கழக மாநிலத்துணை செயலாளர் அ.செல்லப்பாண்டியன், இரா.பாண்டியம்மாள்,முகம்மது ரபீக்,அ.மணியரசு, பூபாலன், தென்னிலவன், கொ.ஆறுமுகம், கதி ரவன்,சிறுத்தகனி,கதிரவன், வரிச்சியூர் பூமிநாதன், புதுதாமரைப்பட்டி ஓவியர்.நா.அழகர்சாமி, அரசமுதுப் பாண்டியன், பரமசிவம், ஆதிவளவன், பனையூர் சேகர், உசிலை பழச்சாமி அனுபப்பானடி பாலகுமார், முத்து, ரமேசு, ப.மார்க்கண்டன் முத்துக்குமார், கரும்பாலை திருமா தேவன், ம.கார்த்திக்,ஸவீட் ராஜா, ர.அலாவுதீன், ச.வீரையா, கத்தப்பட்டி மலைச்சாமிபாலு, மற் றும்....நகர , ஒன்றிய , முகாம் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
thiruma.in செய்திக்காக
- ஓவியர்.நா.அழகர்சாமி
0 comments:
கருத்துரையிடுக