பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க நீதிபதி வர்மா கமிஷனிடம் தொல்.திருமாவளவன் ஆலோசனைகள் அளித்தார்
பாலியல் வன்கொடுமைகளைத் தடுப்பது தொடர்பாக நமது நாட்டிலுள்ள குற்றவியல் சட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்களைப் பரிந்துரைக்க முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைவர் நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் மூன்று பேரைக் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. ஒரு மாதத்திற்குள் அது தனது பரிந்துரைகளை அளிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. நீதிபதி வர்மா குழுவிடம் அரசியல் கட்சிகள் தமது ஆலோசனைகளை அளிக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே அவர்கள் கடிதம் எழுதியிருந்தார். அதனடிப்படையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 16 ஆலோசனைகளை இன்று வழங்கியுள்ளது.
பாலியல் வன்கொடுமைக்கு எல்லாப் பெண்களுக்குமே ஆளாகிறார்கள் என்றாலும் தலித் பெண்கள் சாதிய வன்கொடுமை என்ற கூடுதல் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகிறார்கள். இந்நிலையில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் தலித்துகள் ஆகிய சமூகத்தின் நலிந்த பிரிவினரைப் பாதுகாக்கும் வகையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த ஆலோசனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இவண்
தொல்.திருமாவளவன்
0 comments:
கருத்துரையிடுக