சமூக பாதுகாப்புச் சட்டங்களும், நடைமுறையும்... பயிலரங்கம் மதுரை


  இலங்கையில் தமிழர்கள் மீது   சிங்கள அரசு நடத்திய   தாக்குதலைப் போலவே, தமிழர்களை சிங்கள அரசு  எவ்வாறெல்லாம் அடக்கி ஒடுக்க நினைத்ததோ, அதைப்போலவே   தமிழகத்தில் தலித் மக்கள் மீது  ஆதிக்க சாதிவெறியர்கள் தொடர்ந்து கண்மூடித்தனமாக  தாக்குதல் நடத்திக்கொண்டு   இருக்கிறார்கள். இந்த தலித் மீதான  தாக்குதலை  தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கை போதுமானதாக இல்லை. அரசு   அதிகாரிகளும் மெத்தனமாகவே உள்ளனர். ஏறக்குறையாக தமிழகத்தில்  தாழ்த்தப்பட்ட மக்கள் மாற்றான் தார  மக்களாகவே நடத்தப்பட்டுப்பட்டு வருகிறார்கள்.



         தலித் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும்  வன்கொடுமைகளை தடுக்கும் விதமாக உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டங்களும் ஆதிக்கசாதி 
அதிகாரிகளாலும், அரசியல்வாதிகளாலும் செயலற்று போய்விட்டது.  இந்த வன்கொடுமை சட்டத்தை தீவிரப்படுத்தவும்   சமூக பாதுகாப்பு சட்டங்களைப் பற்றி எளிய மக்களும் தெரிந்துகொள்ளும்  வகையில் அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவதற்காக............. மதுரையில்   சமூக பாதுகாப்புச் சட்டங்களும், நடைமுறையும்...  பற்றிய பயிலரங்கம்      26-01-2013   சனிக்கிழமை காலை 10.00 மணியளவில்   புதூர் ஐ.டி ஐ.  ஆயர்  இல்லம்   டைமண்ட் அரங்ககில் நடைபெற்றது.      இன்றளவும் தூசு தட்டப்படாமல் கிடக்கின்ற அச்சட்டங்களை தீவிரமாக நடைமுறைப் படுத்துவதற்கான   வழிமுறைகளை    கண்டறிவதற்காகவும்... இந் நிகழ்ச்சியினை      "இணை"   அமைதிக்கான மேடை  ஒருங்கிணைப்பு  செய்திருந்தது.

 விடுதலைசிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில்   நடைபெற்றது வழக்கறிஞர்கள்  கரோலின், பெரியார்வேந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   விடுதலைசிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் இரவிக்குமார் .கலந்துகொண்டு  உரையாற்றினார்  


வழக்கறிஞர்கள்  தவமணி  அருள்ஜோசப், பேராசிரியர் பிரபா.கல்விமணி,  வழக்கறிஞர் சே.கீதா சாட்சியம் செயல் இயக்குனர் கதிர்,  வழக்கறிஞர் ப.இரவிக்குமார், ஆற்றலரசு  ஏ .சி பாவரசு,  கனியமுதன் , மோ.எல்லாளன், இரா.பாண்டியம்மாள்,  அ.செல்லப்பாண்டியன்  கனியமுதன் , மு.பாண்டியரசன், இன்குலாப்,அன்பழகன், பார்வேந்தன், திருக்குமரன், பெரியசாமி,  பாலசந்தர்,  சிதம்பரம் சக்திவேல். பொன்ராஜ், கதிர்பாண்டியன், மாதவன்,  பூபாலன்,  கொ.ஆறுமுகம், வரிச்சியூர் பூமிநாதன், சிறுத்தகனி,   ஓவியர்.நா.அழகர்சாமி   மற்றும்   வெளிமாவட்டங்களிலிருந்து   திண்டுக்கல் அருண் பிரசாத்   தேனி லிங்கேஸ்வரன்,   தூத்துக்குடி சதீஸ் பாலன்,    திருநெல்வேலி மனோகரன்   சிவகங்கை ராஜாராம்   விருதுநகர் முருகன்   உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

இணைவோம் ஒன்றாய் ! 
வாழ்வோம் இணையாய்!


 --ஓவியர்.நா.அழகர்சாமி  

1 comments:

super

10 பிப்ரவரி, 2013 அன்று PM 9:31 comment-delete

கருத்துரையிடுக