கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு: முற்றுகை போராட்டம்

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தின் சார்பில் இன்று ( ) தலைமை செயலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இன்று காலை சென்னை ராஜரத்தினம் மைதானத்தில் கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு இயக்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் மற்றும் தமிழர் அமைப்புகள் கூடினர்.விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் எழுச்சித் தமிழர் தலைமையில் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். செய்தியாளர்களிடம் பேசிய எழுச்சித் தமிழர் அவர்கள் கூடங்குளம் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அனைத்து அணுமின் நிலையங்களையும் மத்திய அரசு மூட வேண்டும்மென கூறினார். மேலும் அனைத்து அரசியல் கட்சிகளும் , தமிழர் இயக்கங்களும் ஒரே இடத்தில் கூடி நிகழ்த்தும் இந்த ஆர்ப்பாட்டம் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்றார். மேலும் அவர் காவல்துறை பல்வேறு மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட போரட்டகாரர்களை கைது செய்துள்ளது என்றும் கூறினார். தமிழகத்தில் கடுமையான மின் தட்டுப்பாடு நிலவும் இந்த நேரத்தில் ஜெயம்கொண்டம் அனல் மின்நிலையத்தை அரசாங்கம் ஏன் திறக்காமல் இருக்கிறது எனவும் கேள்வி எழுப்பினார். தலைமைச் செயலகத்தை நோக்கி பேரணியாய் செல்ல முயன்ற எழுச்சி தமிழர், வைகோ, வேல்முருகன், பாரூக் அப்துல்லாஹ், தியாகு, கொளத்தூர் மணி, திருமுருகன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.














புகைப்படங்கள் : ஆதிபகவன் 

1 comments:

vazthukal thozar

29 அக்டோபர், 2012 அன்று PM 9:49 comment-delete

கருத்துரையிடுக