கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான அறவழி போராட்டத்தை, உதயகுமார் தொடர்ந்து நடத்தி செல்ல வேண்டும்: திருமாவளவன் வேண்டுகோள்




கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து இடிந்தகரையில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று 398-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் இந்த அறவழி போராட்டத்தில் 5-வது முறையாக கலந்து கொண்டுள்ளேன். அறவழியில் போராடும் மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர். 

ஆனால் அணு உலையில் விபத்து ஏற்பட்டால் சுற்று வட்டார பகுதியில் வசித்து வருகிறவர்களுக்கும், வருங்கால சந்ததியினருக்கும் தலைமுறை தலைமுறையாக பாதிப்புகள் ஏற்படும் அபாயநிலை உள்ளது. எனவே தான் இப்பகுதி மக்கள் தங்களின் வாழ்வாதார உரிமைக்காக அமைதி வழியில் ஒரு ஆண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர்.

மணப்பாட்டில் மீனவர் அந்தோணி ஜான் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகி உள்ளார். இடிந்தகரையில் கடலில் நின்று போராடியபோது அப்பகுதியை பலமுறை வட்டமடித்த போர் விமானத்தின் இரைச்சலில் மயங்கி விழுந்து மீனவர் சகாயம் பலியாகி உள்ளார். இங்குள்ளவர்கள் பாகிஸ்தான், இலங்கையை சேர்ந்தவர்கள் கிடையாது. தமிழக மக்களின் வாழ்வாதார உரிமைக்காக போராடுபவர்கள் என்பதை அரசு உணர வேண்டும்.

போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் கைதாக வேண்டாம். இந்த அறவழி போராட்டத்தை தொடர்ந்து நடத்தி செல்ல வேண்டும். இவ்வாறு திருமாவளவன் எம்.பி. பேசினார்.

0 comments:

கருத்துரையிடுக