ராஜபக்சேவை இந்தியாவில் அனுமதிக்க கூடாது : நாடாளுமன்றத்தில் தொல்.திருமாவளவன் போராட்டம்
மக்களவை நண்பகல் 12 மணிக்கு கூடியபோது விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தமது கைகளில் இந்தியா வரும் இலங்கை அதிபர் ராஜபட்சேவை சுஷ்மா ஸ்வராஜ் வரவேற்கக் கூடாது, தமிழர்களின் உணர்வுகளை பிரதமர் புண்படுத்தக்கூடாது ஆகிய இருவாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி முழக்கமிட்டார்.
அப்போது நிலக்கரி சுரங்க விவகாரத்தை அவையின் மையப்பகுதியில் எழுப்பிக்கொண்டிருந்த பா.ஜ.க உறுப்பினர்களின் கவனம் தொல்.திருமாவளவன் மீது திரும்பியது.
எல்.கே அத்வானியும் பதாகைகளில் குறிப்பிட்டிருந்த வாசகங்களை படித்தார். இதைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் அருகே வேகமாக வந்த பா.ஜ.க உறுப்பினர் கீர்த்தி ஆசாத் தொல்.திருமாவளவன் கையில் இருந்த பதாகையை பறித்துச் சென்று சுஷ்மா ஸ்வராஜ்ஜிடம் காட்டினார் .
நாடாளுமன்ற விவகாரத்துறை இணை அமைச்சர் ஹரீஷ்ராவத் தொல்.திருமாவளவன் அவர்களின் மற்றொரு கையில் இருந்த பிரதமர் தொடர்பான வாசகம் இடம்பெற்ற பதாகையை எடுத்துச்சென்றார். ஆனால் தொல்.திருமாவளவன் அவரிடம் பேசி அந்தப் பதாகையை மீண்டும் தம் கையில் வைத்துக்கொண்டார்.
மீண்டும் மையப்பகுதிக்கு வந்த தொல்.திருமாவளவன் அவர்களிடம் தமிழர்களுக்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல இலங்கை அதிபரை மத்திய பிரதேச அரசும் மத்திய அரசும் தான் இந்தியாவுக்கு அழைத்துள்ளது என சுஷ்மா ஸ்வராஜ் கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்து பேசிய தொல்.திருமாவளவன் அவர்கள் மாநில அரசு ஆனாலும் அது பா.ஜ.க அரசு தானே எனக் கூறினார். இவ்வாறு இரு தரப்பினருக்கிடையே நீண்ட விவாதம் ஏற்ப்பட்டு மக்களவை நாள் முழுவதற்கும் ஒத்திவைக்கப்பட்ட்து.
0 comments:
கருத்துரையிடுக