திருமா சூறாவளிப்பிரச்சாரம்
வன்னியர் இட ஒதுக்கீடு போராளிகளுக்கு “தியாகிகள் பென்சன்” வழங்கிய முதல்வர் கலைஞர் கூட்டணிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் வாக்களியுங்கள்!
தொல்.திருமாவளவன் பிரச்சாரம்
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில், சனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன்
இன்று புவனகிரி ஒன்றியம் மற்றும் சேத்தியாதோப்பு ஒன்றியம் பகுதிகளில் கிராமம் கிராமமாகச் சென்று ‘நட்சத்திரம்’ சின்னத்தில் வாக்குகள் கேட்டு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பிரச்சாரத்தின் போது கூடியிருத்த மக்களிடையே திருமாவளவன் பேசும்போது “விடுதலைச்சிறுத்தைகளுக்கு கிடைத்திருக்கிற சின்னம் ‘நட்சத்திரம்’. இப்போது நடப்பதும் சுட்டெரிக்கும் வெயிலடிக்கும் ‘அக்னி நட்சத்திரம்’ காலம். அக்னி நட்சத்திரம் வெயிலைப் போல ‘நட்சத்திரம்’ சின்னத்தின் வெற்றிக்கு அருகிலும் எதிர்த்துப் போட்டியிடும் எவராலும் நெருங்க முடியாது. எனவே 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி. வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கேட்டுப் போராடி உயிரிழந்த வன்னியர்கள் குடும்பங்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கியதும், அந்தக் குடும்பங்களைச் சார்ந்தவர்களுக்கு “தியாகிகள் பென்சன்” வழங்கி வன்னியர் சமுதாயத்திற்கு பல்வேறு நல்ல பணிகளை செய்ததும் தமிழக முதல்வர் கலைஞரின் தலைமையிலான திமுக அரசுதான். ஆனால் அ.தி.மு.க வன்னியர்களுக்கு செய்திருக்கும் பணியென்று ஏதாவது ஒரு சான்று காட்டமுடியுமா? எனவே ஒட்டு மொத்த வன்னியர் சமூகத்தினரும் முதல்வர் கலைஞர் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில். தி.மு.க தலைமையிலான சனநாயக முற்போக்குக் கூட்டணிக்கு பேராதரவைத் தந்து எனக்கு ‘நட்சத்திரம்’ சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதே போல், இந்தியா விடுதலை அடைந்து, கடந்த அரை நூற்றாண்டுகாலத்தில் ஒரு தலித் தலைமையிலான கட்சிக்கு நாடாளுமன்ற தேர்தலில் இதுவரை, கூட்டணியில் இரண்டு இடங்களை யாருமே கொடுத்ததில்லை. ஆனால் சமத்துவப்பெரியார் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் மனமுவந்து விடுதலைச்சிறுத்தைகளுக்கு இரண்டு இடங்களை கூட்டணியில் கொடுத்திருக்கிறார். எனவே தலித் சமூகத்தைச்சார்ந்த மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக தி.மு.க கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும். சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் எனக்கு ‘நட்சத்திரம்’ சின்னத்தில் பெருவாரியான வாக்குகளை அள்ளித் தந்து வெற்றிபெறச் செய்ய வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்
இந்த சூறாவளிப்பிரச்சாரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மற்றும் தி.மு.க, காங்கிரசு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகளும் ஏராளமான கூட்டணிக்கட்சியினரும் கலந்து கொண்டனர்.
04.05.09 அன்று புவனகிரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேத்தியாதோப்பு ஒன்றியத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தமிழக முதல்வர் கலைஞர் அவர்களின் ஆட்சியில் குறை காண முடியாத எதிர்கட்சியினர் குறிப்பாக செல்வி ஜெயலலிதா அவர்கள் திடிரென்று ஈழ மக்களுக்காக போராடுவதாக நடிக்கின்றார். கலைஞர் அவர்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக தனி ஈழம் அமைவதில் ஆதரவு தெரிவித்து வருகிறார். அவர் இந்த தமிழினத்திற்கு ஆற்றிய பணிகளுக்காகவும் மேலும் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து சேரவும் மக்கள் மரவாமல் நட்சத்திரம் சின்னத்திற்கு ஆதரவு தெரிவிக்கவும் வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
0 comments:
கருத்துரையிடுக