திருமாவளவனை ஆதரித்து இஸ்லாமியர்கள் பரப்புரை

தொல்.திருமாவளவனை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத் தலைவர்கள் சிதம்பரம் தொகுதியில் 100 இடங்களில்

சூராவளி பிரச்சாரம்.


சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில், சனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா- அத்தின் மாநில நிர்வாகிகள் .அப்பாஸ் அலி, எம்.எஸ்.சுலைமான், கோவை. ரஹ்மத்துல்லா ஆகியோர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா-அத்தின் கடலூர் மாவட்டச் செயலாளர் முத்துராஜா மற்றும் திமுக ஒன்றியச் செயலாளர் முத்துராஜா ஆகியோருடன் இணைந்து சிதம்பரம் நகரம், பரங்கிப்பேட்டை, லால்பேட்டை உள்ளிட்ட 100 இடங்களில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.



பிரச்சாரத்தில் பேசிய தமிழ்நாடு தவ்ஹீத் ஜம்-அத் தலைவர்கள்ஒட்டுமொத்த இசுலாமியச் சமூகத்தின் தொப்புள்கொடி உறவாகவும், எங்கள் வீட்டுப் பிள்ளையாகவும் நாங்கள் கருதும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியின் சனநாயக முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இசுலாமியர்கள் அனைவரும்நட்சத்திரம்சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்து, அவரை பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தால், இசுலாமியர்களின் உரிமைகளை மீட்டெடுக்க குரல் கொடுப்பார். மதவாத சக்திகளுடன் எந்த உறவையும் வைத்திராத தொல்.திருமாவளவனை ஆதரிப்பது இசுலாமியர்களின் உணர்வு பூர்வமான கடமையாகும்என்று குறிப்பிட்டனர்.



இப்பிரச்சாரப் பயணத்தை விடுதலைச்சிறுத்தைகள் நிர்வாகிகள் இளஞ்சேகுவோரா, இமாம் சம்சுதீன் ஒருங்கிணைத்திருந்தனர்.

0 comments:

கருத்துரையிடுக