வாக்காளர்கள் அங்கிகாரம் தர வேண்டும்
விடுதலைச் சிறுத்தைகளுக்கு இரண்டு இடங்களில் போட்டியிட அங்கிகாரம் தந்த கலைஞரைப் போல வாக்காளர்களும் தர வேண்டும் தொல். திருமாவளவன் பேச்சு!
சனநாயக முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் 29.04.2009 - ஆம் நாள் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதி – குன்னம் சட்டமன்றத் தொகுதியிக்குட்பட்ட, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஒன்றியங்களில் ‘நட்சத்திரம்’ சின்னத்தில் வாக்குகள் கேட்டு, பிரச்சரத்தில் ஈடுபட்டார்.
பிரச்சாரத்தில் தொல். திருமாவளவன் “இந்தியா விடுதலை அடைந்ததிலிருந்து 62 ஆண்டுகளில், ஒரு தலித் தலைமையிலான கட்சிக்கு தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த கட்சியும் கூட்டணியில் 2 இடங்கள் கொடுத்து மிகப் பெரிய அங்கிகாரத்தை கொடுத்திருக்கிறார். அந்த அங்கீகாரத்தை வாக்காளர்களாகிய நீங்களும் அளித்து என்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இது வரை நீங்கள் எந்த கட்சிக்கு வாக்களித்திருந்தாலும் இந்தத் தேர்தலில் எனக்கு நட்சத்திரம் சின்னத்தி;ல் வாக்களிக்க வேண்டும்.
உங்களது குறைகளைத் தீர்க்க, உங்களுக்காக வாதாட, அரியலூரில் மத்திய அமைச்சர் ராசா உறுதியளித்த சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க பாடுபட எனக்கு வாக்களியுங்கள். 25 ஆண்டுகளாக என் சொந்த வாழ்வைத் தொலைத்து விட்டு எந்த எதிர்பார்ப்புமின்றி, மக்களுக்காக உழைக்கும் எனக்கு வாக்களிக்க வேண்டும். என்று குறிப்பிட்டார்.

0 comments:
கருத்துரையிடுக