இலங்கையில் தவிக்கும் தமிழர்களை கப்பலில் மீட்டு வரவேண்டும் : திருமாவளவன்
|
இலங்கையில் தவிக்கும் தமிழர்களை கப்பல் மூலம் அழைத்து வந்து இந்தியா மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ராணுவம் சுற்றி வளைத்திருக்கின்ற நிலையில் அங்கே சிக்கித் தவிக்கின்ற ஒன்றரை லட்சம் தமிழர்களை மீட்பதற்குரிய நடவடிக்கையில் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்.
இந்திய கப்பல்கள் மூலம் தமிழ் மக்களை மீட்டு, இந்தியாவிற்கு கொண்டுவந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவேண்டும். இந்த மனிதாபிமான நடவடிக்கையையாவது இந்திய அரசு விரைந்து மேற்கொள்ள வேண்டும்.
இலங்கையில் போர் முனையில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை காப்பாற்ற வேண்டிய பெரும் பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கும், இந்திய அரசுக்கு உள்ளது என்பதை சுட்டிக்காட்டுகிறோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார். |
|
0 comments:
கருத்துரையிடுக