ஈழ தமிழர்களுக்காக உயிர்நீத்த ஆனந்தின் இறுதி நிகழ்வில் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு



ஈழ தமிழர்களுக்காக உயிர்நீத்த ஆனந்தின் இறுதி நிகழ்வில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு

ஈழத் தமிழர்களுக்காக தீக்குளித்து உயிரைத் தியாகம் செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியை சார்ந்த கடலூர் ஆனந்த்தின் உடலம் அவரின் சொந்த ஊரில் இறுதி நிகழ்வு நடைபெற்றது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கடலூர் அன்னவெளி மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் நாகலிங்கம் மகன் ஆனந்த் என்று அழைக்கப்படும் ஆனந்தராஜ் (வயது 23).

இவர், விடுதலை சிறுத்தைகள் நடத்திவந்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று வந்தார் இந்நிலையில், ஈழத்தில் கொல்லப்பட்டு வரும் தமிழர்களை காக்க வேண்டியும், அங்குப் போர் நிறுத்தம் வேண்டியும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15.03.09) தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். தீக்காயங்களுடன் அண்ணன் திருமாவளவன் வாழ்க ! ஈழம் வாழ்க ! என்று புலம்பியபடி கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அன்றிரவே புதுவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று ஆனந்த் உயிரிழந்தார். ஆனந்தின் உடல் அன்னவெளிக்குக் கொண்டு வரப்பட்டு இன்று, பொதுமக்களின் வணக்கத்துக்காக வைக்கப்பட்டது.




இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் கோ.க.மணி ஆகியோர் சென்று மலர் மாலை வைத்து வணக்கம் செலுத்தினர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச் செல்வன், சட்டப்பேரவை உறுப்பினர் ரவிக்குமார், கலைக்கோட்ட உதயம், பா.மா.கா வேல்முருகன், ம.தி.மு.க மல்லை சத்யா, தி.மு.க இள.புகழேந்தி, கடலூர் சட்டப்பேரவை உறுப்பினர் அய்யப்பன், தர்மலிங்கம், செல்வராஜ் உள்ளிட்டோரும் கலந்து கொண்டு ஆனந்தின் உடலிற்கு வணக்கம் செலுத்தினர்.

இதனையடுத்து, அங்கு வணக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. பின்னர், ஊர்வலமாக ஆனந்தின் உடலம் எடுத்துச் செல்லப்பட்டு மயானத்தில் இறுதி நிகழ்வு செய்யப்பட்டு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

வணக்க பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பழ.நெடுமாறன், ஈழத் தமிழருக்காக உயிர் நீத்த ஆனந்த் குடும்பத்தாருக்கு 3 லட்ச ரூபா நிதி விரைவில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வழங்கும் எனக் கூறினார்.

1 comments:

இந்தியா ஜனனாயக முலாம் பூசப்பட்ட நாடு௯5% சதவிகிதம் சர்வாதிகாரமும் 5 % சதவிகிதம் ஜனனாயகமும் கொன்ட,பிரமினர்கலின் பின்புற முன்டன்கலால் ஆன நாடு!
எனக்கு அவமானமக உள்ளது!

20 மார்ச், 2009 அன்று 10:48 AM comment-delete

கருத்துரையிடுக